'கறுப்பனின் காதலி'யில் சிம்புக்கு கவுரவ வேடம்?
- 29.08.2007
By JBR
அடுத்த கோதாவுக்கு தயாராகிவிட்டார் விஜய டி.ஆர். புதிய கோதாவின் பெயர் 'கறுப்பனின் காதலி.' அவருக்கு ராசியான ஒன்பது எழுத்து பெயர்.
|
|
|
'வீராசாமி'யை முட்டி மோதி நூறுநாள் ஓட்டியவர் புதிய புராஜெக்ட்டில் புத்திசாலித்தனமாக காலடி வைக்கிறார். இளைய தலைமுறையை கவர, தனது அடுக்குமொழிக்கு சக்தி போதாது என்று நினைத்தாரோ, தெரியவில்லை. 'கறுப்பனின் காதலி'யில் சிம்புவை கவுரவ வேடத்தில் களமிறக்க உள்ளாராம்.
டி.ஆர்.தான் நடிகைகளை தொட்டு நடிக்க மாட்டார். மகன் உல்டா. தொடாமல் நடிக்க மாட்டார். 'கறுப்பனின் காதலி' யில் தமிழின் முன்னணி நடிகைகள் அனைவரையும் சிம்புடன் நடிக்க வைக்க உள்ளனர். அனேகமாக அது பாடல்காட்சியாக இருக்கும் என்கிறது காற்றுவாக்கில் வந்த செய்தி.
முன்னணி நடிகைகள் என்றதும், நயன்தாராவுமா என நீங்கள் குசும்பாக கேட்பது புரிகிறது. சிம்பு அதற்கு தயார் என்றாலும் நயன்தாரா இன்னும் நார்மலுக்கு வராததால் 'கறுப்பனின் காதலி' களில் நயன்தாராவை யாரும் தேட வேண்டாம்.
சரி, டி. ஆருக்கு ஜோடி யார், மும்தாஜா?
|