|
காதலன் - கணவன் இடையே மாட்டிக்கொண்டு வெளிவர துடிக்கும் பெண் அதற்கான வல்லமையை கேட்பதுதான் படத்தின் கதையாம். ரொம்பவும் நல்லவராக இருக்கும் கணவனிடமிருந்து விவாகரத்து கேட்கும் மனைவி கதாபாத்திரத்தில் சாயாசிங் நடிக்கிறார்.
கணவன் கதாபாத்திரத்திற்கு பார்த்திபனை பொருத்தமாக தேர்ந்தெடுத்த இயக்குனர் மதுமிதா, காதலன் கேரக்டரை தேடி பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம்.
இளம் ஹீரோக்கள் பலரிடம் கால்ஷீட் கேட்டபோது சிறப்பு தோற்றத்தில் நடிக்கமுடியாதென்று உதட்டை பிதுக்கிவிட்டனராம். கடைசியாக ஸ்ரீகாந்திடம் சென்ற மதுமிதா கதை சொன்ன அடுத்த நிமிடமே தான் நடிப்பதாக ஒப்புக்கொண்டாராம் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்துக்கு சிறப்புத் தோற்றம் என்றாலும் படம் முழுவதும் வருவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் திரைக்கதையை அமைத்துள்ளாராம் மதுமிதா.
பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிப்பது குறித்து பார்த்திபனிடம் கருத்துகேட்டால், "ஆண்களைவிட பல பெண்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். மதுமிதாவும் அதில் ஒருவர்தான்" என்கிறார் பார்த்திபன்.
|