|
அரசியலில் மட்டுமல்ல சினிமாவில் கூட ஓவர் நைட்டில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அந்த வகையில் நயன்தாரா காட்டில் இப்போது பட மழையும் பண மழையும் பெய்ய ஆரம்பித்துள்ளது.
சிம்புவுடன் டூ விட்ட பிறகு கேரியரில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்தார் நயன்தாரா. தெலுங்கு திரையுலகம் சென்று ஆந்திர நாயகிகளின் வயற்றில் புளியை கரைக்கும் அளவிற்கு புகழ் கொடியை நாட்டினார். அவர் நடித்த 'லட்சுமி' (தெ) வசூலை வாரி குவிக்கவே தமிழிலும் அப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.
இதற்கிடையே 'பில்லா' படத்தில் நயன்தாரா காட்டிய படுகவர்ச்சி அவரது மார்கெட்டை ராக்கெட்டாய் உயர்த்தியுள்ளது 25 முதல் 30 லகரங்கள் வரை வாங்கிய நயன்தாராவின் கால்ஷீட்டிற்காக காத்திருக்கும் இயக்குனர்கள் லிஸ்ட் நீண்டு வருகிறது
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவேண்டும் என கணக்குப் போட்ட நயன்தாரா தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திவிட்டாராம். அறுபது முதல் எழுபது லட்சம் வரை கொடுக்க முன் வரும் தயாரிப்பாளர்களுக்கே முன்னுரிமை தருகிறாராம் நயன்.
தனுஷின் 'யாராடி நீ மோகினி' விஷாலின் 'சத்யம்' படங்களில் மட்டும் பழைய சம்பளம். 'பில்லா'வுக்கு பிறகு கால்ஷீட கேட்கும் படங்களுக்கு நயன்தாரா கேட்கும் சம்பளம் ஒரு லோ பட்ஜெட்டின் தயாரிப்பு செலவுக்கு சமமாம்.
|