|
அறிமுக இயக்குனர் விஜய் இயக்கிவரும் படம் 'பயணிகள் கவனத்திற்கு'. முழுக்க முழுக்க ரெயிலிலேயே நடக்கும் கதைகொண்ட இப்படத்தில் ஜீவன் நாயகனாக நடிக்கிறார். நாயகி யார் என்பது இன்னும் முடிவாகாமல் முடியை பிய்த்துக்கொண்டு அலைகிறார் இயக்குனர். இதற்கு காரணம் நாயகன்தானாம்.
தமிழ் சினிமாவின் மரபு மீறாதபடி கதாநாயகனுக்கே அதிக முக்கியத்துவம் உள்ள இக்கதையில் கதாநாயகி போர்ஷன் பதினைந்தே காட்சிகள்தானாம். எனவே கதாநாயகி வரும் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு 70 சதவீதம் எடுக்கப்பட்டுவிட்டதாம்.
இனியாவது கதாநாயகி போர்ஷனை எடுக்கலாம் என நினைத்த இயக்குனர் ஹீரோயின் வேட்டை நடத்தினாராம். இதற்கிடையே அசின் அல்லது த்ரிஷா இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஜீவன் குண்டை தூக்கிப்போடவே இயக்குனரின் நிலவரம் பாக்கிஸ்தான் போல கலவரமாகியுள்ளதாம்.
படத்தில் கதாநாயகிக்கான முக்கியத்துவம் குறைவு என்பதால் பிஸியாக இருக்கும் அசினும் த்ரிஷாவும் இதில் நடிக்க ஒத்துக் கொள்வது என்பது குதிரை கொம்புதான். தவிர அவர்கள் கேட்கும் சம்பளம் தரமுடியாத சூழ்நிலையும் இருக்கிறதாம்.
இப்படி குழப்பங்களில் இயக்குனரும், தயாரிப்பாளரும் தவித்தாலும் அசின், த்ரிஷாதான் வேணும் என அடம் பிடிக்கிறாராம் ஜீவன்.
என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு.
|