ரஜினி பட டைட்டில்கள் விற்பனைக்கு
- 29.12.2007
By Amalan
தமிழ் சினிமாவில் ரீமேக் வியாதி தொற்றினாலும் தொற்றியது டைட்டில் வியாபாரம் கனஜோராக நடக்கிறதாம்.
|
|
|
சமீபகாலமாக ஹிட்டான பழைய படங்களை ரீமேக் செய்வதும், அதே டைட்டில்களை பயன்படுத்துவதும் தொடர்கதையாகிவிட்டது அஜித்தின் 'பில்லா' வில் ஆரம்பித்து பல நடிகர்கள் ரீமேக் கதைகளை விரும்ப ஆரம்பித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக ரஜினி பட தலைப்புக்கு அநேகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த டைமிங்கை காசு பண்ண ஆசைபடும் சிலர் தாயரிப்பாளர்கள் சங்கத்தில் ரஜினி படத்தின் டைட்டில்களை பதிவு செய்து வைத்துள்ளனராம்.
'பாயும்புலி', 'மூன்றுமுகம்', 'முரட்டுகாளை', 'நல்லவனுக்கு நல்லவன்', 'மனிதன்', 'வேலைக்காரன்', 'குரு சிஷ்யன்' போன்ற 30 ரஜினி படத்தின் டைட்டில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பெரிய நடிகர்களை வைத்து ரஜினி படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் கம்பெனிகளிடம் பதிவு செய்த டைட்டில்களை கணிசமான விலைக்கு விற்கலாம் என்பதே சிலரது கணக்காக இருக்கிறதாம்.
'பருத்திவீரன்', 'வெயில்', 'கற்றதுதமிழ்', 'மொழி' போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கான பெருமைகளை ஒரு பக்கம் சேர்த்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் டைட்டில் பஞ்சமும் கதை பஞ்சமும் தலைவிரித்தாடுவதை நினைத்தால் நகைச்சுவையாகதான் இருக்கிறது.
|