தூயதமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என முதல்வர் அறிவித்ததிலிருந்து யாரும் ஆங்கிலப்பெயர் வைப்பதில்லை. முதல்வரின் வரிச்சலுகையால் திரையரங்கு உரிமையாளர்களே நேரடியாக பயன்பெறுகிறார்கள். தவிர்க்க முடியாமல் ஆங்கிலப்பெயரை தேர்வு செய்தாலும், முதலீடு இல்லாமல் கிடைக்கும் வரி்ச்சலுகை லாபத்துக்காக இவர்கள் ஆங்கிலத்தை அனுமதிப்பதில்லை.
இந்தப் பிரச்சனை 'ரோபோ' வுக்கும் உள்ளது. பட அறிவிப்பு வெளியானபோதே 'ரோபோ' வுக்கு இணையான தமிழ்ச்சொல்லை கண்டுபிடிக்கும் வேலை சுஜாதா தலைமையில் தொடங்கிவிட்டது.
ரோபோ' வுக்கு தமிழில் இருக்கும் ஒரே நல்ல பெயர் இயந்திர மனிதன். இதில் அவ்வளவு கவர்ச்சி இல்லாததால் 'இயந்திரா' என சுருக்கியிருக்கிறார்கள். வசீகரா மாதிரி இயந்திரா! ரஜினியின் பேரன் - அதாவது ஐஸ்வர்யா, தனுஷ் தம்பதியின் மகனின் பெயர் யாத்ரா. இயந்திராவுக்கும் பேரன் பெயருக்கும் உச்சரிப்பில் ஒற்றுமையிருப்பதால் சூப்பர்ஸ்டார் குஷியாகி விட்டார், படத்துக்கு 'இயந்திரா' தான் இறுதியான பெயர் என்கிறார்கள்.
எனினும் ரஜினி விஷயம், கடைசி நேர மாறுதலுக்கு நிறைய இடமுண்டு என்கிறார்கள்!
|