முன்னாள் கர்நாடக முதல் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் எச்.விஸ்வநாத். இவர் 'ஹள்ள ஹக்கி ஹாடு' என்றொரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இதில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான, எஸ்.எம்.கிருஷ்ணா குறித்த அந்தரங்க தகவல்களை அள்ளி வீசுகிறார்.
கிருஷ்ணா, கன்னடத்துப் பைங்கிளி நடிகை சரோஜாதேவியுடன் காதல் கொண்டிருந்தார், அதனால்தான் 2004 தேர்தலில் மாண்டியா தொகுதியில் சரோஜாதேவியை காங்கிரஸ் சார்பில் நிறுத்த முயன்றார் என்றொரு செய்தி விஸ்வநாத்தின் கிராமத்துப் பறவையில் சொல்லப்பட்டிருக்கிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, கவர்னராக இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவை கர்நாடக அரசியலில் இறங்க வைக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. இந்நிலையில் அவரது இமேஜை உடைக்கும் விதமாக ஒரு முன்னாள் காங்கிரஸ் மந்திரியே புத்தகம் எழுதியிருப்பது கர்நாடக காங்கிரஸினுள் புயலை கிளப்பியிருக்கிறது. மாநிலம் முழுவதும் விஸ்வநாத்துக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது.
விஸ்வநாத்தின் புத்தகம் குறித்து கேட்டதற்கு, எஸ்.எம். கிருஷ்ணாவுடன் நட்பு இருந்தது, அதுவெறும் நட்பு மட்டும்தான். எனது கணவர் வர்ஷாதான் எனக்கு கடவுள் என்று தெரிவித்தார் சரோஜாதேவி.
|