காரணம், அமீர்கான் வடிவேலுவின் தீவிர ரசிகர்!
இந்த உலகமகா ரகசியத்தை உடைத்தவர் முருகதாஸ். அசினின் பெர்பாமன்ஸை பார்க்க 'போக்கிரி' படத்தை முருகதாஸூடன் பார்த்திருக்கிறார் அமீர்கான். அசினின் டோலுடோலுவை ரசித்தாரோ இல்லையோ, வடிவேலு திரையில் தோன்றிய போதெல்லாம் வாய் வலிக்க சிரித்திருக்கிறார். படம் முடியும்போது அமீர்கான் வைகைப்புயலின் தீவிர ரசிகராகவே மாறிவிட்டார்.
முருகதாஸ் அமீர்கானிடம் 'இம்சை அரசன்...' படத்தைப் பற்றி கூறி, வடிவேலு ஹீரோவாக சூப்பர் ஹிட் கொடுத்தவர் என எக்ஸ்ட்ரா புள்ளி விவரங்கள் கொடுத்துள்ளார்.
இதனை கேள்விப்பட்ட வடிவேலு புல்லரித்துப் போய் விட்டார். ஆஸ்கார்வரை போன ஒரு நடிகர் எனக்கு ரசிகரா என ஆச்சரியத்தில் இருப்பவர், தனது புதிய அதிரடியான 'இந்திரலோகத்தை...' ஆங்கில சப்-டைட்டிலுடன் அமீர் அண்ணாச்சிக்கு போட்டு காண்பிக்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த வடிவேலு, நான் ஹீரோவாக நடிப்பது பிடிக்காதசிலர், 'இந்திரலோகத்தில்...' படம் சரியில்லை என்று அவதூறு கிளப்புகிறார்கள் என ஆவேசப்பட்டார். அந்த அவதூறு பார்ட்டிகள் யார் என்பதை அழகப்பன் கடைசிவரை வெளிப்படுத்தவில்லை.
|