தமிழ்திரை காணாத புதுமுகம் என்று அறிமுகப்படுத்திய தாமரையை எங்கோ பார்த்த நினைவு. ஞாபகப் பக்கங்களை புரட்டியதில் 'கொடைக்கானல்' படத்தில் நடித்த ஷாம்னாதான் பெயர்மாறி தாமரையாகியிருக்கிறார் என்பது தெரிந்தது.
விலங்கியலில் பரத்தின் ஜோடி தாமரை என்று எங்கும் விளம்பரப்படுத்திய நிலையில், திடீரென விலங்கியலில் பரத்தின் ஜோடி பூர்ணா என்றொரு ஷாக் தகவல்.
என்னவென்று பார்த்தால், படப்பிடிப்பு தளத்தில் ஷாம்னாவாக இருந்து தாமரையாக பெயர்மாறிய அதே 'கொடைக்கானல்' ஹீரோயின்தான் நடித்துக் கொண்டிருந்தார். அப்படியானால் பூர்ணா?
தாமரைதான் தனது பெயரை பூர்ணா என்று மாற்றி வைத்திருக்கிறார். ஏற்கனவே நடிகை கல்யாணி தனது பெயரை பூர்ணிதா என திடீரென்று மாற்றி கோடம்பாக்கத்தை குழப்பிக் கொண்டிருக்கிறார். போதாததற்கு ஷாம்னா என்கிற தாமரையும் பூர்ணாவாகமாறி குட்டையை குழபபுகிறார்.
இரண்டு தடவைக்கு மேல் பெயர் மாற்றக்கூடாது என சட்டம் கொண்டுவர முதல்வர் ஆவன செய்தால் புண்ணியம் கிடைக்கும்!
|