ராமேஸ்வரம் பகுதியில் எளிய முஸ்லீம் குடும்பம் ஒன்றில் பிறந்து தனது அறிவால் ஜனாதிபதி பதவியை எட்டிப்பிடித்த அப்துல்கலாமின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள ஏராளமுண்டு.
இந்த சாதனை வாழ்க்கையை ஒருமணிநேர குறும்படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பி.தனபால். கலாமின் வாழ்க்கை வரலாற்றுடன் அவரது பூர்வீக வீடு, அவர்படித்த பள்ளிக்கூடம், அவரது அண்ணன் மற்றும் கலாமுடன் பழகியவர்களின் நேர்காணல்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றன.
பெரிய திரையிலிருந்து ஒதுங்கி வாழும் ஷோபனா இந்த குறும்படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் டி.வி.டி.யாக வெளிவர உள்ளது.
கலாம் எழுதிய அக்னிசிறகுகள் போல் இந்த குறும்படமும் அமோக ஆதரவு பெறும் என இப்போதே பேச்சு எழுந்துள்ளது.
நல்ல விஷயங்களை நாலுபேர் எதிர்பார்ப்பதும், நேர்மறையாக பேசுவதும் ஆரோக்கியமான விஷயம்.
|