தீ விபத்தில் உயிர் தப்பிய நமீதா
- 30.04.2008
By Amalan
பட்டு மேனியை பஞ்சராக்கவிருந்த தீ விபத்திலிருந்து உயிர் தப்பினார் நமீதா.
|
|
|
சென்னை நுங்கம்பாக்கத்தில் சொகுசு பங்களா ஒன்றில் குடியிருந்து வருகிறார் நமீதா. பெற்றோர்கள் குஜராத்தில் வசிப்பதால் நமீதாவின் வீட்டில் வேலைக்காரர்கள் மட்டும் உள்ளனர்.
நமீதா தனது பாதுகாப்புக்காக, ராட்சத உயரத்தில் மூன்று வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். இவை தவிர, வீட்டு வாசலில் கூர்க்காவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்.
நமீதா, காலையில் படப்பிடிப்புக்கு சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவார். அவர் இப்போது, 'இந்திர விழா' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய நமீதா, படுக்கை அறையில் உள்ள 'ஏர் கண்டிஷன்' மிஷினை 'ஆன்' செய்தார். சீராக ஓடிக்கொண்டிருந்த 'ஏர்கண்டிஷன்' மிஷினில் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. படுக்கை அறை முழுவதும் ஒரே புகையாக இருந்தது.
நமீதா 'தீ...தீ...' என்று அலற ஆரம்பித்தார். வேலைக்காரர்கள் ஓடிவந்து, மின்சார இணைப்பை முதலில் துண்டித்தார்கள், பின்னர் ஏர்கண்டிஷன் மிஷின் மீது தண்ணீரை கொட்டி, தீயை அணைத்தார்கள். அதிர்ஷ்டவசமாக, ஒரு பெரும் தீ விபத்தில் இருந்து நமீதா உயிர் தப்பினார்.
|