சென்னையில் நாளை நட்சத்திர கலைவிழா
- 30.04.2008
By Amalan
சென்னையில் நாளை ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் நட்சத்திர கலைவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ரீமாசென், நமீதா, லஷ்மிராய் உள்ளிட்ட நடிகைகள் நடனமாடுகின்றனர்.
|
|
|
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் கடந்த 3 வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த நடிகர்-நடிகைகள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
2006-2007-ம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா, நாளை வியாழக்கிழமை மாலை 4-30 மணிக்கு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடக்கிறது.
விருது பெறும் நட்சத்திரங்களின் பெயர்கள், விழா மேடையில் அறிவிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியையொட்டி, நட்சத்திர கலைவிழாவும் நடைபெறுகிறது.
பிரபல டான்ஸ்மாஸ்டர்கள் கலா, அம்ரிதா ஆகியோரின் மேற்பார்வையில் நடிகர்கள் ஷாம், வினித், சுனில் ஷெட்டி, நடிகைகள் ரீமாசென், நமீதா, சங்கீதா, ஷெரீன், லட்சிமி ராய், நிலா, பூர்ணா ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் சங்கத்துடன் ஜீ.வி.பிலிம்ஸ், ஜெயா டி.வி ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகிறார்கள்.
|