பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாரிப்பில் அசோக், 'வெயில்' பிரியங்கா ஜோடியாக நடிக்கும் படம் 'வானம் பாத்த பூமியிலே'.
காரைக்குடி அருகே உள்ள கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்றுமுன் தினம் நாயகனும், நாயகியும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனின் உதவியாளர் எப்படி நடிக்கவேண்டுமென நாயகன், நாயகிக்கு சொல்லிக்கொடுத்தார்.
பிரியங்காவை கோபத்தில் அசோக் கீழே தள்ளுவதுதான் காட்சி. முதல் இரண்டு டேக்குகள் சரியாக வராததால் மூன்றாவது டேக் எடுக்கப்பட்டது. அப்போது காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக பிரியங்காவின் கையை பிடித்து பலமாக கீழே தள்ளினார் அசோக்.
இதனை சற்றும் எதிர்பாராத பிரியங்கா கீழே விழுந்ததில் அவரது இடது கை முட்டி முறிந்தது. வலியால் துடித்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே ரத்தானது.
இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்தாலும் பிரியங்காவிடம் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார் அசோக்.
சரி அடுத்த வாரம் யாருக்கு என்ன நடக்குமோன்னு பொறுத்திருந்து பார்ப்போம் ஹய்யோ...ஹய்யோ!
|