கொழுப்பைக் குறைக்கும் நடிகைகள்
- 30.04.2008
By Amalan
இடையின் அழகு எடையில் இருப்பதால் தமிழ், தெலுங்கு நடிகைகள் பலர் போட்டிபோட்டுக்கொண்டு கொழுப்பை குறைக்கும் சிகிச்சையை மேற்கொள்வது பேஷனாகிறது.
|
|
|
நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கு தகுந்தமாறு உடம்பை ஏற்றலாம், இறக்கலாம். ஆனால், நடிகைகளின் நிலை அப்படியில்லை. மாட்டுக்கு தீனி வைப்பதுபோல தங்கள் உடம்பை சிலிம்மாக வைத்துக்கொள்வது பெரும் வேலையாக இருக்கிறது.
தொண்ணூறுகளின் இறுதிவரை தமிழ்த்திரையுலகில் அறிமுகமான கதாநாயகிகள் பலரும் கனத்த உடம்புடனேயே இருந்தனர். ஆனால், இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. ஊதினால் ஒடிந்துவிடும் இடையும், அழகான முகவெட்டும் மட்டுமே நடிகைகளின் முதல் தகுதியாக இருக்கிறது.
அந்த வகையில் உடம்பை சிலிம்மா வைத்துக்கொள்ள கொழுப்பை உறிந்தெடுக்கும் செயற்கையான சிகிச்சைகளை பல நடிகைகள் எடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் குண்டாக இருந்த நயன்தாரா 'சிவாஜி' படத்திற்கு பிறகு படு சிலிம்மாக தென்படுவதற்கு காரணம் இந்த சிகிச்சை முறைதான்.
ஒருகாலத்தில் இடையழகி சிம்ரனுக்கெல்லாம் இயற்கையாகவே உடல்வாகு மெலிதாக அமைந்திருந்தது. ஆனால், இப்போது வரும் நடிகைகள் திடீர் திடீரென்று சதைபோட்டுவிடுகிறார்கள். என்னதான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும் அதில் ஓரளவுதான் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்பதால் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சையை பல நடிகைகள் எடுத்துவருகின்றனர்.
அசின், த்ரிஷா, ஸ்ரேயா, வேதிகா, சினேகா, லட்சுமிராய் உள்ளிட்ட தமிழ் நடிகைகளும், ஜெனிலியா, இலியானா உள்ளிட்ட தெலுங்கு நடிகைகளும் இந்த சிகிச்சையை எடுத்து வருகின்றனராம்.
|