Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
கிராபிக்ஸால் பாதித்த ‘கந்தசாமி’
- 30.06.2009
By Amalan
ரொம்ப நாளாச்சு சீயான் படம் பார்த்து. ’கந்தசாமி’ எப்போ வரும்? எதிர்பார்ப்புகளை எகிறவைத்துக்கொண்டிருக்கும் ‘கந்தசாமி’ இப்போதைக்கு ரிலீஸ் இல்லை.
பத்து கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் கலைப்புலி தானு தயாரிக்கும் ‘கந்தசாமி’யை சுசிகனேசன் இயக்கியுள்ளார். நாட்டின் பொருளாதார் சீரழிவுக்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்கும் ஒரு இளைஞனின் கதை இது என கூறப்படுகிறது. படத்தின் தொடக்க விழாவையும், பாடல் வெளியிட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்திய தானு படத்துக்கும் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
பெண் உட்பட பல கெட்டப்புக்களில் வரும் விகரம் ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் அனைத்து பாடல்களையும் விக்ரம் சொந்தகுரலில் பாடியுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் ‘கந்தசாமி’ உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 28 தியேட்டர்களில் வருகிறதாம்.
அடுத்தமாதம் வெளிவருவதாக இருந்த ‘கந்தசாமி’யை திடீர் பிரேக்போடவைத்துள்ளது படத்தின் கிராபிக்ஸ் வொர்க். கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய மட்டும் இன்னும் மூன்று வாரங்கள் தேவைப்படுகிறதாம். எனவே ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் தானு.
|