'அழகிய தமிழ்மகன்', 'குருவி' படங்களுக்குப் பிறகு மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் தமிழர்களுக்கு அறிமுகமில்லாத ஆயிஷா தாகியா. இன்னொருவர் தமிழர்களுக்கு அறிமுகமானவராக இருப்பார். அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
லண்டன் கருணாஸ் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு முன்னால், வேறொரு படம் தயாராகிறது. தயாரிப்பது இதே லண்டன் கருணாஸ். நடிப்பது அஜித். படத்தை இயக்குவது ராஜுசுந்தரம்; பிரபுதேவாவின் அண்ணன்.
அஜித், விஜய் என டாப் ஹீரோக்களின் கால்ஷீட்டை ஒரே நேரத்தில் கையில் வைத்திருக்கும் கருணாஸ் சைலண்டாக ஜெயம்ரவி படத்தையும் தயாரித்து வருகிறார். ஜனநாதன் இயக்கும் இந்தப் படத்துக்கு வெற்றி கொண்டான் என பெயர் வைத்துள்ளனர்.
நிற்க. பேக் டூ அஜித், விஜய். அஜித் படத்தை அண்ணன் இயக்குகிறார். விஜய் படத்தை தம்பி இயக்குகிறார்.
முந்தப் போவது அண்ணனா தம்பியா என இப்போதே பெட் கட்டத் தொடங்கிவிட்டனர் கோடம்பாக்கவாசிகள்.
|