ஜீவா நடிப்பில் பாலுமகேந்திராவின் உதவியாளர் ராம் இயக்கிவரும் படம் 'தமிழ் எம்.ஏ'. இதில் நான்குவிதமான தோற்றங்களில் தமிழ் எம்.ஏ பட்டதாரியாக நடிக்கிறார் ஜீவா. அவருக்கு ஜோடியாக அஞ்சலி என்ற புதுமுகம் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
யுவான் சுவாங் என்னும் கதாபாத்திரத்தில் கருணாஸ், நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்துகிறாராம். கதையோடு கைக்கோர்க்கக்கூடிய பாடல்களையும் பின்னணியும் அமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர்ராஜா.
வழக்கமாக ஒரு படத்தின் பாடல்கள் ஆடம்பரமான இடங்களில் கம்போஸ் செய்து உருவாக்குவது என்பது பேஷனாகிவிட்டது. இந்த படத்தை பொறுத்தவரை வேறு விதமாக நடந்துள்ளது. தினமும் பின்னிரவு வேளைகளில் சாலிக்கிராம தெருக்களில் நடந்தபடியே பாடல்களை எழுதியிருக்கிறார் கவிஞர் நா. முத்துக்குமார்.
சமீபத்தில் பிரசவத்திற்காக நா. முத்துக்குமாரின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்குள்ள சின்ன பூங்காவில் அமர்ந்து ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.
"உன்னோடு போகின்ற பாதை இது நீளாதோ...
தொடு வானம் போலவே..." என்ற வரிகளை எழுதியபோது முத்துக்குமாரின் கண்களில் நீர்த்துளிகள் சரம் தொடக்க ஆரம்பித்ததாம்.
அந்த அளவிற்கு உணர்ச்சியும், தத்துவமும், காதலும் கலந்த ஒரு பாடலாக உருவாகியுள்ளதாம்.
|