'காளை'யில் கலக்கும் சங்கீதா
- 30.08.2007
By JBR
பிரச்சனைக்குரிய வேஷமா? கூப்பிடு சங்கீதாவை என்று ஆகிவிட்டது. கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணியாக 'உயிர்' படத்தில் நடித்த பிறகு, அதுபோன்ற வேடங்களே அவரை அண்டுகிறது.
|
|
|
தற்போது நடிக்கும் 'தனம்' படத்தில் விலைமாது வேடம். கலர்ஃபுல் காஸ்ட்யூமும், அழுத்தமான லிப்ஸ்டிக்கும், இழுக்கிற பார்வையுமாக படத்தின் ஸ்டில்களே மிரட்டுகின்றன.
அதைவிட 'காளை'தான் கான்ட்ரவர்ஸியில் முதலிடம் வகிக்கிறது. சிம்புவின் மாமியாராக, அவர்மீது ஆசைப்படுபவராக நடிக்கிறார் சங்கீதா. 'காளை'யில் நீங்க மாமியாரா என்று கேட்டால், சாமியாராக இருந்தாலென்ன, மாமியாராக இருந்தாலென்ன, படம் பார்த்தா பிரமிச்சுப் போயிடுவீங்க என்றார்.
கேரக்டர் எதுவா இருந்தாலும் என் நடிப்பு உங்களுக்கு பிடிக்கும் என்றார் நம்பிக்கையுடன். 'உயிர்' படத்தைப் பார்த்து பலர் சங்கீதாவின் பரம ரசிகர்களாயினர். அதுபோலொரு புரட்சியை 'காளை'யும் ஏற்படுத்தும் என்றார் சங்கீதா.
நம்முடைய கவலையெல்லாம் 'காளை' மாதர் சங்கங்களுக்கும் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளுக்கெல்லாம் பிடிக்குமா என்பதே.
அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் படப்பெட்டி மாயமாகி யாரும் படம் பார்க்க முடியாதே!
|