இயக்குனராகும் தனது கனவின் கதாநாயகனாக ராஜசேகர் டிக் செய்திருப்பது ஆர்யாவை. கதை தயார். கதைப்படி இரண்டு ஹீரோயின்கள். அசின், நயன்தாரா என ராஜசேகர் கணக்கு போட்டு வைத்துள்ளார். இருவருக்கும் சேர்த்து சம்பளமே ஒரு கோடி வந்துவிடும். படத்தை தயாரிக்கும் நேமிசந்த் ஜபக் நிறுவனத்துக்கு ஒரு கோடி பொருட்டல்ல. ஆனால், எதிரெதிர் துருவங்களான அசினும், நயனும் இணைந்து நடிப்பார்களா? மில்லியன் டாலர் கேள்வி!
இன்டஸ்ட்ரியை சுற்றும் இன்னொரு தகவல், விஷ்ணுவர்தன் படத்தில் ஆர்யா மீண்டும் நடிக்கிறார்! 'பில்லா'வுக்கு முன்பு விஷ்ணுவர்தன் சூர்யாவை வைத்து 'சர்வம்' படத்தை எடுப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் கவுதமின் 'வாரணம் ஆயிரம்' வாய்ப்புவர சர்வத்தை உதறினார். (இப்போது சூர்யா 'வாரணம் ஆயிரம்' படத்தையும் ஒதுக்கி வைத்து 'வேல்' படத்தில் நடிப்பது வேறு விஷயம்).
விஷ்ணுவர்தனின் 'சர்வம்' கதை அப்படியேதான் உள்ளது. 'பில்லா'வை முடித்துவிட்டு சர்வத்தை தூசு தட்டுகிறார் விஷ்ணுவர்தன். இதில் நாயகனாக இவரது சாய்ஸ், ஆர்யா! ஏற்கனவே இருவரும் சேர்ந்து 'பட்டியல்' போட்டவர்கள் என்பதால் மீண்டும் இணைவது சாத்தியமே.
எல்லாவற்றுக்கும் 'நான் கடவுள்' விரைவில் வெளியாக பாலா அருள்பாலிக்க வேண்டும்!
|