ஒருகோடியே இருபத்தைந்து லட்சம் இதற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக பிப். 24-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 'இதயராகம் 2008' என்ற பெயரில் மலையாள இசையமைப்பாளர்கள, பாடகர்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவை இளையராஜா தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் தூதுவராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
'இதயராகம் 2008' இசை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
"கலை எல்லைக்கோடுகளை அழிக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியில் தமிழகக் குழந்தைகளும் பயன்பெறுவார்கள்" என்றார் கமல்.
இசைநிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனையை கமல் தொடங்கி வைத்தார். நேற்றைய நிகழ்ச்சியில் மலையாள மனோரமா பத்திரிகை சார்பில் குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ 25 லட்சத்துக்கான காசோலை கமலிடம் வழங்கப்பட்டது.
தனது பேச்சில் 'தசாவதாரம்' பற்றி குறிப்பிட்ட கமல், "படத்தை ஏப்ரலில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாக என்னிடம் சொன்னார். மார்ச்சில் நடக்கும் இசை வெளியீட்டு விழாவில் ஜாக்கிசான் கலந்து கொள்வாரா என்பதை உறுதிசெய்தபின் கூறுகிறேன்" என்றார்.
|