சாப்பாட்டு விஷயத்தில் தனுஷ் ஒரு வள்ளலார். அசைவ உணவுகளை தொடுவதில்லை. உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உடற்பயிற்சியை வழக்கப்படுத்தியிருக்கிறார்.
'யாரடி நீ மோகினி' படப்பிடிப்பை முடித்தபின் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஜிம்மிற்கு சென்று உடற்ப்பயிற்சி செய்தார். வெயிட் தூக்கும்போது, அதுநழுவி தனுஷின் மூக்கில் விழுந்து ரத்தகாயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
'கோயில்' படத்தில் எப்படி வெயிட் தூக்குவது என்று வடிவேலு செய்முறை விளக்கம் செய்து, மூக்கில் அடிவாங்குவாரே.... ஏறக்குறைய அதே மாதிரிதான் தனுஷூக்கும் ஆகியிருக்கிறது.
சின்னகாயம் என்பதால் தொடர்ந்து தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்தனர்.
|