"ரஜினி ஒரு வசீகர சக்தி" - வைகோ
- 31.01.2008
By JBR
அரசியல்வாதியாகிவிட்டபின் எதிர்க்கட்சிகளை தவிர யாரையும் பகைத்துக்கொள்ள முடியாது. வைகோவுக்கும் அப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
|
|
|
விவசாயிகள் மத்தியில் பேசிய வைகோ, முதல்வரிடம் ரஜினிகாந்த், "சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்" என்று சொன்னதை குறிப்பிட்டு, முதல்வருக்கு சினிமாக்காரர்களின் பிரச்சனையை கேட்கதான் நேரம் இருக்கு என்றார்.
இது ரஜினி ரசிகர்களை அப்செட் ஆக்கிவிட்டது. நம்பதலைவரை எப்படி வைகோ திட்டலாம் என கூட்டம் போட்டனர்.
இதனை அறிந்த வைகோ, நான் ரஜினி குறித்து எதுவுமே சொல்லவில்லை. இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டு விழாவில் எனது பேச்சை ரஜினி ரசித்ததை பெருமையாக நினைப்பவன். மக்கள் திலகம், நடிகர் திலகத்திற்குப் பிறகு தமிழகத்தின் வசீகர சக்தியாக ரஜினி இருக்கிறார் என்றெல்லாம், ஆற்று வெள்ளம்போல் ரஜினி குறித்து பாராட்டி தள்ளியிருக்கிறார்.
இருக்கிற சில இளைஞர்களும் ரஜினி விஷயத்தில் கோபித்துக் கொண்டு சென்றால், என்னதான் செய்வார் வைகோ!
|