'வெத்தலையை போட்டேண்டி...' - அஜித் ஆட்டம்!
- 31.05.2007
By JBR
இம்மாத இறுதி அஜித் ரசிகர்களுக்கு அனேகமாக தீபாவளியாக இருக்கலாம். அஜித்தின் லேட்டஸ்ட் அதிரடி 'கிரீடம்' இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கதைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை தொடர்ந்து வெளிவருகிறது 'பில்லா.'
|
|
|
மலேஷியாவில் இப்படத்தின் ஷுட்டிங் வேகமாக நடந்து வருகிறது. விஷ்ணுவர்தன் இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு நயன்தாரா, நமிதா என இரண்டு ஜோடிகள்.
ரஜினியின் 'பில்லா' படத்தின் ரீ-மேக்கான இதில் பழைய 'பில்லா'வில் இடம் பெற்ற 'மை நேம் ஈஸ் பில்லா...' பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். அன்று தமிழகத்தை தலையாட்ட வைத்த பாடல் 2007-லும் கலக்கும் என்கிறார் விஷ்ணுவர்தன்.
மேலும், 'வெத்தலையை போட்டேண்டி...' பாடலையும் ரீ-மிக்ஸ் செய்கிறார்கள். 'மை நேம் ஈஸ் பில்லா...' அஜித்துக்கு ஆப்டாக இருந்ததால் பழைய பில்லாவின் இன்னொரு பாடலான 'வெத்தலையை போட்டேண்டி...' யையும் ரீ-மிக்ஸ் செய்கிறார்கள்.
அஜித்தின் அதிரடி ஆக்ஷ்ன் படமாக 'பில்லா' இருக்கும் என்றார் விஷ்ணுவர்தன். 'தல' ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கு!
|