அரவிந்த் கிருஷ்ணாவுக்கு செல்வராகவன் கல்தா!
- 31.08.2007
By JBR
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, செல்வராகவன் பிரிவு உறுதியாகிவிட்டது. செல்வராகவனின் புதியபடம் 'ஆயிரத்தில் ஒருவனி'ல் அரவிந்த் கிருஷ்ணாவுக்கு இடமில்லை.
|
|
|
'துள்ளுவதோ இளமை' தொடங்கி 'புதுப்பேட்டை' வரை செல்வாவின் அனைத்துப் படங்களுக்கும் அரவிந்த் கிருஷ்ணாவே ஒளிப்பதிவு. செல்வா, யுவன், அரவிந்த் கிருஷ்ணா இணைந்து வெள்ளை யானைகள் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினர்.
இப்போது அரவிந்த் கிருஷ்ணா படத்திலும் இல்லை, நிறுவனத்திலும் இல்லை. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பதில், 'ராம்', 'பருத்திவீரன்' படங்களின் ஒளிப்பதிவாளர் ராம்ஜியை ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன். இசைக் கூட்டணியில் மட்டும் மாற்றமில்லை. இசை யுவன். பாடல்கள் நா. முத்துக்குமார்.
கார்த்தி, ரீமா சென் நடிக்கும் இந்தப்படத்தில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' ஆன்ட்ரியா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். டிரீம்வேலி கார்ப்பரேஷன் ஆர். ரவீந்திரன் படத்தை தயாரிக்கிறார்.
கார்த்தி, ரீமா சென் இடம்பெறும் பாடல் காட்சிக்காக சென்னை பிலிம்சிட்டியில் பிரமாண்டமான அரங்கு தயாராகிறது. இதன் மதிப்பு மட்டும் முக்கால் கோடியாம்!
|