பிரசன்னா, நரேனுடன் கேரளாவைச் சேர்ந்த அஜ்மலும் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், பொன்வண்ணன் மற்றும் பாண்டியராஜன் நடிக்கிறார்கள்.
'நான் அவன் இல்லை' படத்தை தயாரித்த நேமிசந்த் ஜபக் ஆறுவது சினத்தை தயாரிக்கிறது. வாளமீனுக்கு இசையமைத்த சுந்தர் சி. பாபு இசை. ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி.
புதிய படம் தொடங்குவதை முன்னிட்டு புதியதொரு தீர்மானம் எடுத்துள்ளார் மிஷ்கின். படம் தொடங்கி பர்ஸ்ட் காப்பி தயாராகிறவரை செல்போனை பயன்படுத்துவதில்லை! இயக்குனரே செல்போனை பயன்படுத்தவில்லையென்றால் படப்பிடிப்பில் வேறு யாருக்கும் செல்போனை கையில் எடுக்க பயம் வரும். கவனம் சிதறாமல் படப்பிடிப்பு நடக்கும்.
இந்த, செல்போனை தவிர்க்கும் (நல்ல) மேனியா சினிமா இன்டஸ்ட்ரியில் வேகமாக பரவி வருகிறது. பாலுமகேந்திரா படப்பிடிப்பில் மட்டுமல்ல, எப்போதுமே செல்போன் பயன்படுத்துவதில்லை. படப்பிடிப்பில் ரிங் சத்தம் கேட்டாலே சேரன் முகம் சிவந்து விடும். அமீர்கானும் சமீபமாக செல்போன் பயன்படுத்துவதில்லை என்கிறது வடக்கிலிருந்து வரும் தகவல். இந்தி கஜினி படப்பிடிப்பில் யார் செல்போன் பயன்படுத்தினாலும் 500 ரூபாய் ஸ்பாட் பைன்.
இது ஒருபுறம் இருக்க, செல்போனை மையமாக வைத்து 'தொ(ல்)லைபேசி', 'நாயகன்', 'வேகம்' ஆகிய மூன்று படங்கள் தமிழில் தயாராகி தொ(ல்)லைபேசி ரிலீஸாகியும்விட்டது.
நகை முரண்?
|