* 'சித்திரம் பேசுதடி' வெற்றி படத்தை கொடுத்த மிஷ்கின் நீண்ட காத்திருப்புக்கு பிறகு இயக்கியுள்ள படம் இது.
* போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் நரேன், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார்.
* இதுவரை ஏற்றிராத, எந்த ஹீரோவும் ஏற்க துணியாத வித்தயாசமான வில்லனாக பிரசன்னா நடித்துள்ளார்.
* மாறுபட்ட கேரக்டரில் மீசையில்லாமல் நடித்துள்ளாராம் பாண்டியராஜன்.
* சுந்தர்.சி பாபு இசையமைப்பில் கபிலன், ப்ரியன் பாடல்களை எழுத, பாரதியாரின் பாடல் ஒன்றும் இடம்பெறுகிறதாம்.
* ஏவி.எம். ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் போடப்பட்டு இரு பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது.
* படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு சென்னை நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நடந்துள்ளது.
* 'கத்தால கண்ணால குத்தாத என் மேல' என்ற குத்து பாடலுக்கு மும்பை அழகி ஸ்னிக்தா ஆடியுள்ளார்.
* மிகைப்படுத்தாத வகையில் சண்டைக்காட்சியை எதார்த்தமாக அமைத்துள்ளாராம் ஆக்ஷ்ன் பிரகாஷ்.