* ஏ.எம். ரத்னத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பு.
* 'சாமி'க்குப் பிறகு விக்ரம், த்ரிஷா இணையும் படம்.
* ஆர்.டி. ராஜகோபால் ஒளிப்பதிவு, வசனம் எஸ். ராம கிருஷ்ணன்.
* சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, மதுரை நாயக்கர் மஹால் ஆகிய இடங்களில் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன.
* இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் த்ரிஷா.
* படப்பிடிப்பு தளத்தில் உடற்பயிற்சி உபகரணங்களை நிரந்தரமாக வைத்திருக்கிறார் விக்ரம். ஒவ்வொரு காட்சிக்கும் முன்பும் உடற்பயிற்சி செய்த பிறகே கேமராமுன் நடிக்கத் தொடங்குகிறார்.
* நிழல் உலக தாதா கதையென்றாலும் காதல் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக கூறுகிறார் லிங்குசாமி.
* 'சிவாஜி' க்கு பிறகே 'பீமா' ரிலீஸ் என்பதால் போஸ்ட் புரொக்டக்ஷ்ன் வேலைகள் மெதுவாக நடந்து வருகின்றன.