* ஆனந்தா பிக்சர்ஸ் எல். சுரேஷ் தயாரித்துள்ளார்.
* ரஜினி நடிப்பில் வெளியான 'பில்லா' வின் ரீ-மேக் இது.
* பில்லா வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இதில் இவருக்கு இரண்டு வேடங்கள்.
* பழைய 'பில்லா' வில் பிரவீணா நடித்த வேடத்தில் நமிதாவும், ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் நயன்தாராவும் தோன்றுகிறார்கள்.
* கே.பாலாஜி நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரபு நடித்துள்ளார்.
* முழுப் படமும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
* நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக் காட்சிகளை வில்லியம் ஓங் அமைத்துள்ளார்.
* மலேசியாவின் புகழ்பெற்ற முருகன் திருவிழாவை மையமாக வைத்து 'சேவல்கொடி...' பாடலை எடுத்துள்ளனர்.
* பழைய 'பில்லா' வின் 'மை நேம் ஈஸ் பில்லா...,' 'வெத்தலையை போட்டேண்டி...' பாடல்கள் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளன.
* பாடல்கள் பா.விஜய்.
* "எனது படங்களிலேயே மிகவும் ஸ்டைலிஷான படம் இது" என்கிறார் அஜித்.
* முதன் முறையாக டூ-பீஸ் பிகினி உடையில் தோன்றுகிறார் நயன்தாரா.