* 'உன்னை சரணடைந்தேன்' ஹீரோவும் கங்கை அமரன் மகனுமான வெங்கட் பிரபு இயக்கும் முதல் படம்.
* வெங்கட் பிரபுவின் நண்பர் எஸ்.பி.பி. சரண் மற்றும் ஜே.கே. சரவணா தயாரிப்பு.
* மந்தவெளி, ஆர்.கே. புரம் பகுதியை மையமாகக் கொண்டது என்பதால் அந்த ஏரியா பின்-கோட் ஐயே தலைப்பாக்கியுள்ளனர்.
* இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி நடிகையாக அறிமுகமாகிறார்.
* மும்பை மாடல் கிறிஸ்டினாவும் படத்தில் உண்டு.
* வாலி, கங்கை அமரன் வரிகளில் ஏழு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
* பி. லெனின் எடிட்டிங், சக்திசரவணன் கேமரா.
* யுவன் ஒரு பாடல் எழுதி இந்தப் படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.