*செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கும் முதல் படம்.
*பாபுராஜா தயாரிக்கிறார்.
*விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார்.
*ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் ஐந்து பாடல்கள் எழுதியிருக்கிறார் நா. முத்துக்குமார்.
*மது அம்மாட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
*நா.முத்துக்குமார் எழுதியிருக்கும் இந்தியாவை பற்றிய பாடல், ஏ. ஆர். ரஹ்மானின் 'தாய் மண்ணே வணக்கம்...' பாடலுக்கு இணையாக பேசப்படும் என்றார் மணிகண்டன்.
*பாகிஸ்தான் என்றால் இதுவரை தீவிரவாதத்தை மட்டுமே சினிமாவில் காட்டிவந்தார்கள். மாறாக இதில் காதல், மருத்துவ உதவி என பாஸிட்டிவான விஷயங்களை காட்டியிருக்கிறார்களாம்.
*நீண்ட இடைவெளிக்குப்பிறகு 'ஒருதலை ராகம்' சங்கர் இதில் நடிக்கிறார்.