* புதுமுகங்களை வைத்து படமெடுத்து வந்த சஞ்சய்ராம், பிரபல நடிகர்களை வைத்து இயக்கும் படம்.
* சஞ்சய்ராமின் லிங்கம் ஆர்ட்ஸ் படத்தை தயாரிக்கிறது.
* ஷாம் மூன்று கெட்டப்புகளில் தோன்றுகிறார்.
* பூவரசி என்ற கிராமத்து பெண் வேடம் ஸ்ரீதேவிகாவுக்கு.
* கவர்ச்சிக்கென்றே மேகா நாயரை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
* சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார் ஷாம்.
* கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்துடன் அனைத்து பாடல்களையும் சஞ்சய்ராமே எழுதியுள்ளார்.