* 'கிழக்கு சீமையிலே', 'கருத்தம்மா' உள்பட பல படங்களுக்கு கதை எழுதிய ரத்னகுமார் இயக்கும் முதல் படம்.
* எஸ்.ஜே. சூர்யாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வேடம். முறுக்கு மீசையும் நாலுமுழ வேட்டியுமாக அசல் கிராமத்து கதாபாத்திரம்.
* இவரது ஜோடி மீரா ஜாஸ்மின். ஏழை கிராமத்து பெண் வேடம்.
* ஊனமுற்ற பெண் வேடத்தில் கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார்.
* திருநெல்வேலியை பின்புலமாகக் கொண்ட படம். கம்பம், தேனி பகுதிகளில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
* பாடல் காட்சியை மைசூரில் படமாக்கியிருக்கிறார்கள்.
* கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பு.
* குத்து டான்சுக்கும் கவர்ச்சி சீன்களுக்கும் ரத்னகுமார் ஒத்துக் கொள்ளாததால் அவரை ஓரங்கட்டி எஸ்.ஜே. சூர்யாவே பல (கவர்ச்சி) காட்சிகளை எடுத்துள்ளார்.