* ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அரசியலில் குதித்து ஆட்சிமாற்றத்திற்கு காரணமாகும் மேஜராக டாக்டர் ராஜசேகர் நடித்துள்ளார்.
* 'இதுதாண்டா போலீஸ்' படத்தில் போலீஸ் அதிகாரி எப்படியிருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டியதைபோல ஒரு அரசியல்வாதி எப்படியிருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் படமாம்.
* தெலுங்கில் சூப்பர்ஹிட்டான கையோடு தமிழில் இப்படத்தை வெளியிடுகிறார்கள். தமிழில் ஜீவிதா இயக்கியிருக்கிறார்.
* டாக்டர் ராஜசேகர் ஜோடியாக 'உயிர்' சம்விருதா நடித்துள்ளார்.
* ஒரு பாடலுக்கு நடனமாடி வந்த முமைத்கான் முதல்முறையாக மைம்மா என்னும் பெயரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
* மாணவர்களும் அரசியலில் இறங்கவேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகிறதாம்.
* இசையமைப்பாளர்கள் பலரிடமும் உதவியாளராக இருந்த எஸ். சின்னா என்பவர் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தபட்டிருக்கிறார்.