* படத்தின் இயக்குனர் சக்ரி டொலேடி அமெரிக்காவில் புளோரிடா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 'சலங்கை ஒலி' படத்தில் போட்டோகிராபர் குட்டிபையனாக வந்து கலக்கிய குழந்தை நட்சத்திரம் தான் இவர். சமீபத்தில் 'தசாவதாரம்' படத்திலும் கமலின் அமெரி்கக நண்பராக நடித்திருக்கிறார்.
* இப்படத்தின் இசையமைப்பாளராக இன்னொரு இளைய தலைமுறை நட்சத்திரம் அறிமுகமாகிறார். அவர் ஸ்ருதிஹாசன். ஹாலிவுட் மியூசிக் இன்ஸ்ட்டியூட்டில் முறையாக மேற்கத்திய இசையைக் கற்ற ஸ்ருதி தொழில்முறை இசைக் கலைஞரும் தனிப்பாடலாசிரியரும் ஆவார்.
* புத்தம் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ரெட் கேமிராவில், 4 கே ரெசல்யூசனில் இப்படம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
* இரண்டு முக்கியமான படைப்பாளிகளை ராஜ்கமல் இப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு பரிச்சயப்படுத்துகிறது. எழுத்தாளர் இரா.முருகன் வசன கர்த்தாவாக அறிமுகம் ஆகிறார். கவிஞர் மனுஷ்யபுத்ரன் பாடல் ஆசிரியராக அறிமுகமாகிறார்.
* படத்தின் மூலக்கதை 'எ வெட்னஸ்டே' என்றாலும், ராஜ் கமல் உருவாக்கம். இப்படம் வேறுபட்ட சிந்தனைகளையும் முழுமையான சமூக, கலாச்சார பார்வையையும் கொண்டுள்ளது.
* மும்பைத் திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான மனோஜ் சோனி இப்படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு ஒளிப்பதிவாளராக அடியெடுத்து வைக்கிறார்.
* மோகன்லால் பங்குபெறும் பல முக்கியமான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு கூடுதல் ஒலிப்பதிவு விரைவில் துவங்குகிறது. மே மாத இறுதிக்குள் தமிழ், தெலுங்கு பதிப்புகளின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விடும்.
* படத்தை ஜூலை மாதமே வெளியிடத் தயாரான நிலையில் உள்ளது. ஆனாலும் கமல் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இப்படம் ஆகஸ்டில் வெளியிடப்படும். ஆகஸ்ட் 12, 1959-ல் ஏ.வி.எம்மின் 'களத்தூர் கண்ணம்மா' வெளியானது. அப்படத்தின் பொன்விழா மாதமான ஆகஸ்ட் 2009-ல் ராஜ்கமல்-யூடிவி மோஷன் பிக்சர்ஸின் 'உன்னைப்போல் ஒருவன்' வெளியாவது பொருத்தம்.