Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Ajith pics! - 15.12.2007


Reviews in English
| Archives
 
Amalan
 
பில்லா Ajith


பாட்டியின் பாம்படத்தை உருக்கி பேரனுக்கு பிரேஸ்லெட் செய்துபோட்ட மாதிரி, பழைய 'பில்லா'வை புதிய வடிவில் கையாண்டுள்ளார் விஷ்ணுவர்தன்.

இன்றைய தலைமுறையினர் பலர் பழைய 'பில்லா'வை பார்த்திருக்க வாய்ப்பில்லாததால் புதிய 'பில்லா'வின் கதைச்சுருக்கத்துடன்....

சாதாரண ஆளாக இருந்து கொலை, கொள்ளை, கடத்தல் என சர்வதேச குற்றவாளியாக தேடப்படுபவர் டேவிட்பில்லா. மலேசியா முழுவதும் சல்லடை போட்டுத் தேடும் போலீஸின் கண்ணில் மண்அள்ளி போடுவது என்பது பில்லாவுக்கு சர்வ சாதாரணம்.

வல்லவனுக்கு வல்லவன் இருந்துதானே ஆகவேண்டும்? சென்னையிலிருந்து பில்லாவை பிடிக்க மலேசியா போகும் சிறப்பு போலீஸ் அதிகாரி பிரபுதான் அந்த வல்லவன். அதுவரை கண்ணாமூச்சிக்காட்டிக் கொண்டிருந்த பில்லாவை (அஜித்) மடக்கிபிடிக்கிறார் பிரபு. சந்தர்ப்ப சூழ்நிலையில் அஜித் இறக்கிறார்.

இதனால் துறைசார்ந்த குழப்பம் ஏற்படும் என்பதால் பில்லாவை போன்ற தோற்றத்தில் இருக்கும் இன்னொரு அஜித்தை பில்லா போல நடிக்கவைக்கிறார் பிரபு. பிரபு சொன்னபடி பில்லாவாக மாறும் இரண்டாவது அஜித் தனக்கு எதிராக கிளம்பும் சோதனைகளை சமாளிப்பதே மீதி கதை.

மூட்டை நிறைய மிளகாய் கொட்டி திருஷ்டி சுற்றும் அளவுக்கு ஹாலிவுட் நடிகர்கள்போல அம்சமாக இருக்கிறார் அஜித். கோட்- ஷூட் கூலிங்கிளாஸ் என நடந்துவரும் ஸ்டைலில் 'தல'க்கு தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என பட்டம் தரலாம்.

நிஜ வாழ்க்கையில் சமீபகாலமாக கடைபிடித்துவரும் வார்த்தை கட்டுப்பாட்டை போல இதில் பல இடங்களில் வசன கட்டுப்பாட்டை மீறவில்லை. ஆழ்கடல் மௌனத்திலேயே அஜித் பிரதிபலிக்கும் அர்த்தங்கள் ஏராளம்.


Ajith, Namitha பில்லாவாக மாற்றப்படும் வேலுவாக வரும் அஜித் கலகலப்பில் கைதட்டல் பெறுகிறார். "இதே இடத்தில் பில்லா இருந்தா இந்த கட்டிடத்தில் எத்தனை செங்கல் இருக்குதுன்னு கரெக்டா சொல்லியிருப்பான்" என பிரபு கூறியதும் 'பெரிய கொத்தனாரா இருந்திருப்பானோ' என அஜித் தமாசு பண்ணுமிடத்தில் தியேட்டரில் வெடிச்சிரிப்பு.

போலீஸ் சூப்பிரண்டாக வரும் பிரபு, அவரது சக அதிகாரியாக வரும் ரகுமான் இருவரும் அந்தந்த கேரக்டர்களுக்கு கச்சிதமான பொருத்தம்.

இடுப்பை வளைத்து வளைத்து ஆடும் நயன்தாரா இதில் இரும்பு மனுஷியாக சாகசம் செய்கிறார். நீச்சல்குளத்தில் டூபீஸில் நடந்துவரும்போது நமீதாவின் கவர்ச்சியெல்லாம் சுண்டைக்காயாய் போய்விடுகிறது.

யுவனின் இசையில் 'மை நேம் இஸ் பில்லா...' பாடல் மட்டும் இருக்கிறது நல்லா. 'வெத்தலைய போட்டேன்டி...' பாடலில் சுதி குறைந்து தெரிகிறது டல்லா.

ஹாலிவுட் படத்தின் தரத்திற்கு கொஞ்சமும் குறையாமல் ஒளிப்பதிவிலும், ஸ்டைலிலும் அக்கறை காட்டிய அளவிற்கு திரைக்கதையில் அக்கறை காட்டாதது ஆங்காங்கே 'பில்லா'வின் வேகத்தை தோட்டாவாய்த் துளைத்தெடுக்கிறது.

மேக்கிங்கில் மட்டும் 'பில்லா' நிற்கிறார் தில்லா.
ப்ளஸ்.. மைனஸ்..
அஜித்

ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா

அழுத்தமில்லாத திரைக்கதை

E-mail this page to your friend!
Rate this Movie
View the rating
Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us