Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Vadivelu, Shriya pics! - 09.02.2008


Reviews in English
| Archives
 
Amalan
 
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் Vadivelu, Shriya


கோயம்புத்தூருக்கும் கோபிசெட்டிபாளையத்துக்கும் தினமும் டிராவல் பண்ணினாலே அழுத்துவிடும் இந்க காலத்தில் இரவில் இந்திரலோகத்திலும் பகலில் பூமியிலும் மாறி மாறி வாழ்க்கை நடத்தினால் எப்படியிருக்கும்? என்ற தனது கற்பனைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நாடக கலைஞரான வடிவேலுவுக்கு திருமண பந்தத்தில் தோஷம் இருப்பதாக கூறுகிறார் ஜோதிடர். அதற்கு பரிகாரமாக பெண்ணின் கற்சிலைக்கு மாலை அணிவித்து மணக்க வேண்டும் என்கிறார். அதன்படி வடிவேலு  செய்ய, கற்சிலை உயிராகிறது. அதுதான் ரம்பை. ஒரு சாபத்தால் கற்சிலையாக மாறிய தனக்கு சாபவிமோசனம் கொடுத்த வடிவேலுவை இந்திரலோகத்திற்கு கடத்துகிறார் ரம்பை.

பகலில் பூமியிலும் இரவில் இந்திரலோகத்திலும் விசிட் அடிக்கும் வடிவேலு அங்கிருக்கும் ரகசிய அறைக்குள் சென்று முக்காலம் பற்றியும் தெரிந்துகொள்கிறார். இதனால் இந்திரனின் கோபத்திற்கு ஆளாகும் வடிவேலு 90 வயது கிழவனாக மாற சபிக்கப்படுகிறார். அவரை இந்திரலோகத்திற்கு அழைத்துவந்த ரம்பைக்கும் ஆவியாக அலையும்படி சாபம் கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கான சாப விமோசனம் எப்படி கிடைக்கிறது என்பது கிளைமாக்ஸ்.

நம்பமுடியாத கற்பனை, முப்பது வருடங்களுக்கு முந்திய பல புராண படங்களின் சாயல் போன்ற குறைகளையெல்லாம் சகித்துக்கொண்டு எங்காவது சுவாரஸ்யம் ஏற்படுத்துவார் இயக்குனர் என்ற நமது எதிர்பார்ப்பை எண்ணெய் கொப்பரையில் தள்ளி வதைத்தெடுக்கிறார் தம்பிராமையா.




Vadivelu

எம்.ஜி.ஆர் ஸ்டைல் டான்ஸ், வசனம் என சில இடங்களில் மட்டுமே ரசிக்கவைக்கும் வடிவேலுவிடம் வழக்கமான கலகலப்பை கண்டிபிடிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கலாம். நாடக கலைஞன், எமன், இந்திரன் என மூன்று கதாபாத்திரமும் ஏற்றிருக்கும் வடிவேலு மூன்று மணி நேரமும் பேசியே கொல்கிறார்.

ஏதோ பக்கத்து கேபினுக்கு போவது மாதிரி எமலோகத்திற்கும் இந்திரலோகத்திற்கும் மாறி மாறி பயணிப்பது, எமனையே கொல்ல சித்திரகுள்ளர்களுக்கு பட்டைசாராயம் கொடுத்து ஏமாற்றுவது என நம்மையும் ஏமாற்றுகிறார் இயக்குனர்.

பிரமாண்டமான செட் மட்டும் படத்தில் இல்லாவிட்டால் முச்சந்தியில் வள்ளித்திருமணம் நாடகம் பார்ப்பதுபோலதான் இருந்திருக்கும். ரம்பையாக நடித்திருக்கும் புதுமுகம், நாட்டியத்தை தவிர முகத்தில் எந்த ரியாக்ஷ்ணையும் காட்டவில்லை. நாசருக்கு நாரதர் வேடம். நாராயணா....

துணுக்கு தோரணங்களாக படத்தை தொங்கவிடும் இயக்குனர், அந்தகால விட்டலாச்சாரியார் படத்தை பார்த்தால் நிச்சயம் வெட்கப்படுவார். வடிவேலு, இயக்குனர் இருவரில் ஒருவராவது ஜெயித்திருந்தால் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஜொலித்திருப்பார்.

வடிவேலு பாணியில் சொல்வது என்றால் ஹய்யோ... ஹய்யோ.

ப்ளஸ்.. மைனஸ்..
செட்
உடையலங்காரம்
இசை
கதை
திரைக்கதை
இயக்கம்
E-mail this page to your friend!
Rate this Movie
View the rating
Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us