காதல் திருமணம் செய்துகொண்ட அப்பா - அம்மாவின் வெறுத்துப்போன நாயகன் காதலை வெறுக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதலை வெட்டிவிட்டு காதலர்கலைப் பிரிக்கிறார். இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, ஊர் ஊராகப் போய் காதலர்களை சேர்த்துவைத்து சமுகசேவை செய்கிறார் நாயாகி.
நகுலன் - புர்ணாவின் இந்த இருதுருவ கேரக்டர்கள் எப்படி நகமும் சதையுமாக மாறுகிறது என்பதை காதலும் ரத்தமாக கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
திங்கட்கிழமைக்கு அடுத்து செவ்வாய்க்கிழமை என்று சொன்னால் கூட “கிக்கிப்பிக்கி கிக்கிப்பிக்கி” என்று சிரிக்கும் நகுலனை அதிரடி ஆக்ஸன் தயாரிப்பாளரின் பாராட்டு தெறிவீக்கலாம்.
அப்பா - அம்மாவின் காதல் திருமணம் கசப்பாக இருக்கிறது என்பதற்காக ஊரிலுள்ள காதலை எல்லாம் கண்டுபிடித்து காடுமையாக எதிர்ப்பது சின்னப்புள்ளத்தனம்.
நகுலின் அப்பாவும் அம்மாவும் தங்களிடம் தந்சமடைந்த காதல் ஜோடிக்கு சட்டுபுட்டுனு கால்யாணம் முடித்து அணுப்பி வைக்காமல் நாள்கணக்கில் வீட்டிலே டேரா போடவைத்து உபசரித்து எந்த ஊரிலும் இல்லாத காமெடி.
என்ன பேக்ரவுண்டு, யார் யாரை காதலிக்கிறார்கள் என்று கூட தெரிந்துகொள்ளாமல் ஊர் ஊராக சென்று காதலர்களை சேர்த்து வைக்கிறார் பூர்னா. அனால் அவரது காதல் பற்றி வில்லன் சம்பத்திடம் வெண்டுகோள் வைக்கக்கூட திராணியற்றவராய் சோதப்புக்கிறார்.
ஒரு தாலைக்காதலராக வரும் சண்டைக்கோழி , கோழை ராஜா ஒரு என்றால், அதற்க்கும் மேல் கொலைமேல் கொலை செய்தும் கோழையாகவே தெரிகிறார் சம்பத்
அபாசமில்லாத காமெடிக்காக சந்தானம் அன்ட் கோவைப் பாராட்டலாம். வில்லன் ஊருக்கே போய் அவரை சவால் விட்டு மீரட்டும் நகுலனின் சேட்டைகள் நம்பும்படியாக இல்லை. தீனா இசையில் பாடல்கள் பரவாயில்லை. கோட்டை கட்டுவதாக நினைத்து கோட்டை விட்டிருக்கிறார்கள்.