Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Narkish, Suchin pics! - 16.05.2007


Reviews in English
| Archives
 
Amalan
 
நினைத்தாலே Narkish, Suchin


கெட்டிமேளம் கொட்டும் தருவாயில் காலாவதியாகும் ஒரு கல்யாணத்தில் புதுக்காதல் பூத்தால் எப்படியிருக்கும்...? 'நினைத்தாலே இனிக்கிறது' என்பவர்கள் தொடர்ந்து சுவைத்திடுங்கள் விமர்சனத்தில்!

சின்ன வயதிலேயே சாலை விபத்தொன்றில் குடும்பத்தையே இழந்து தனியாளாக வளர்ந்து ஆளாகும் நாயகி நர்கீசுக்கு உடன் பணிபுரியும் சர்ப்ராசுடன் காதலாகிறது. கல்யாணத்திற்கு நாள் குறித்து முகூர்த்தம் நெருங்கும் வேளையில் சர்ப்ராசின் அம்மா நர்கீஸிடம் தனது பணக்கார ஆணவத்தையும் அடிமை குணத்தையும் வெளிப்படுத்த, மாலை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று மனசை மாற்றிக்கொள்கிறார் நர்கீஸ்.

நர்கீஸன் இந்த முடிவும் அவரது செயல்பாடுகளும் அதே திருமணத்திற்கு வரும் சுசினை ஈர்த்துவிட, அந்த நொடியிலேயே நர்கீஸை காதலிக்க தொடங்குகிறார் சுசின். நாயகனின் மீதும் நர்கீஸ்க்கு காதல் மலரும் நேரத்தில் விபத்தில் தனது பெற்றோர் இறப்பதற்கு காரணமே சுசினின் தந்தைதான் என்பது நாயகிக்கு தெரியவர, நர்கீஸின் இரண்டாவது காதலிலும் இடி விழுகிறது. சுசின் - நர்கீசின் வாழ்க்கையில் சுபவேளை வருகிறதா இல்லை? என்பது மீதி கதை.

ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத நாயகன் நாயகியாக இருந்தாலும் கதையும் அதன் போக்கும் படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அவர்களை இதயத்தில் நெருங்கவைத்து விடுகிறது. எந்தவொரு முடிவிலும் ஒரு தொடக்கம் உண்டு என்ற தத்துவம் கதையின் முடிச்சுக்களில் இழையோடுவது திரைக்கதையை தித்திக்க வைக்கிறது.

'கண்ணோட காண்பதெல்லாம்' படத்திற்கு பிறகு சுசின் நடித்துள்ள படம். காதலியின் காம்பவுண்டுக்குள் குடிபுகுந்து பின்பு அவளின் மனசில் குடிபுகும் ரொமான்ஸ், கிருஷ்ணாவுடன் இணைந்து அடிக்கும் காமெடி லூட்டி என தனது டியூட்டியை திறம்பட செய்துள்ளார் சுசின். அட முதல் படத்திற்கும் இதற்கும் இடையே நடிப்பில் நிறைய மாற்றங்கள் இருக்கிறதே இது சுசின்தானா என்னும் ஆச்சரியத்தில் கிள்ளிப்பார்த்தால், 'கண்ணோட காண்பதெல்லாம்' நிஜமே.


Narkish, Santhoshi புதுமைப்பெண்களில் ஒருவராக புதுமுகம் நர்கீஸின் கதாபாத்திரம். அடுத்தடுத்து வரும் சோதனைகளில் உடைந்துபோய் உருகுவது, சிக்கனம் கருதி எல்லா பொருட்களையும் பேரம்பேசுவது, இரண்டாவதாக பூக்கும் காதலால் சந்தோஷத்தில் சிறகடிப்பது, எப்போதோ ஒருமுறை சுசின் தனது பின்னழகை ரசித்தது ஞாபகத்திற்குவர, அலங்காரம் முடித்துவிட்டு திரும்பும்நொடியில் கண்ணாடியில் பின்புறம் பார்த்துவிட்டு செல்வது என நர்கீஸ் நடிப்பில் புஸ்டியாக இருக்கிறார்.

நாயகன், நாயகி மட்டுமே இருந்தால் அலுப்பூட்டலாகிவிடும். அதை தவிர்ப்பதற்கு கிருஷ்ணா, சந்தோஷின, குட்டீஸ்கள் என சுவாரஸ்ய குவியல்களும் உண்டு.

'பேருதான் ரூபா ஆனா சில்லறையா இருக்காளே...', 'ஏய் நீ நிறைய சினிமா பார்ப்பிய இது அந்த சீனு கிடையாது...' போன்ற பரதனின் வசனங்கள் கதைக்கு சதைப்யூட்டுகிறது. மதியின் ஒளிப்பதிவும் தெளிவான பிரதிபலிப்பு. விஜய் ஆண்டனியின் கைவண்ணத்தில் 'நாந்தானா நாந்தானா...' பாடல் மெலடி ரீங்காரம்.

வி.என். சுந்தரின் திரைக்கதை இயக்கத்தில் 'நினைத்தாலே' இனிக்கிறது.
ப்ளஸ்.. மைனஸ்..
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு

சுசின் - நர்கீஸ்

க்ளைமாக்ஸ்

நர்கீஸின் முதர்ச்சியான முகம்

E-mail this page to your friend!
Rate this Movie
View the rating
Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us