| |
பழனி
அப்பாவின் கள்ளக் காதலியை கொலை செய்து பத்து வயதில் சிறைக்குப் போகும் பரத், பதினைந்து வருடம் கழித்து திரும்பி வந்து, அக்கா குஷ்புவின் கணவர் பிஜூமேனனின் கள்ளக்காதலியை கொன்று ஜெயிலுக்குப் போகிறார். இதுதான் 'பழனி'யின் சுருக்கமான கதை.
பத்து வயது குற்றவாளிகளுக்கு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி இருக்க, பதினைந்து வருடங்களாக பெரியவர்களுக்கான ஜெயிலில் பரத் இருக்கிறார் என படத்தின் ஆரம்பத்தில் வரும் வசனமே, இயக்குனரின் 'சினிமா ஈடுபாட்டை' சொல்லி விடுகிறது.
கொலை, கட்டப் பஞ்சாயத்து, கள்ளக்காதல் என தனது புருஷன் ஒரு சமூக விரோதியாக இருப்பது தெரிந்தும் அவனுக்கு அடங்கி நடந்து, அவனுக்கு அனுசரணையாக தம்பியையும் தூக்கி எறியும் குஷ்புவின் கதாபாத்திரம் ஆணாதிக்கச் சிந்தனையும், பெண்ணடிமைத்தனமும் சேர்ந்து உருவாக்கிய பிற்போக்குச் சித்திரம்.
ஒரு அயோக்கியனை அவன் தனது அக்காவின் கணவன் என்பதற்காகவே சகல சிக்கல்களிலிருந்தும் காப்பாற்றி, அக்காவுடன் ஒன்று சேர்க்கும் பரத்தின் கேரக்டர் பிற்போக்குத்தனத்தின் இன்னொரு சிதறல்.
கள்ளக்காதலில் ஈடுபடும் இரண்டு ஆண்களும் சிறு துன்பமும் இன்றி காக்கப்படுகிறார்கள். மாறாக, இரண்டு பெண்களும் ஹீரோவால் கொல்லப்படுகிறார்கள்.
அசட்டுத்தனம், செயற்கைத்தனம் இரண்டும் சேர்த்துப் பிசைந்த காட்சிகள் என்பதால் அனைவருடைய நடிப்பிலும் இந்த இரண்டும் பிரதிபலிக்கிறது. தப்பிப் பிழைப்பது பிஜூமேனன் மட்டுமே!
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையில், இசையைவிட இரைச்சல் அதிகம். விஜய் மில்டனா கேமரா? டெலிபோனில் அதிர்ச்சியான தகவல் வந்தாலே கேமரா குளிர்ஜூரம் கண்டதுபோல் நடுங்கும்போது, ஆக்ஷ்ன் காட்சிகள் குறித்து விளக்கத் தேவையில்லை.
பரத்தும், காஜல் அகர்வாலும் இரண்டுவரி காதலுடன் பேசினாலே, உதறல் எடுக்கிறது. (அடுத்த நொடி டூயட் வந்து விடுமே!) ஹீரோவிலிருந்து வாட்ச்மேன் வரை அனைவரும் எதுகைமோனையில் வசனம் பேசி செவிப்பறையை பதம் பார்க்கிறார்கள்.
படம் நெடுக பாட்டுக்குப் பாட்டு ரேஞ்சுக்கு வரும் பழைய பாடல்களின் அணிவகுப்பு, பேரரசுவின் அழுகுணி கேரக்டர், தாலி பற்றிய பழம்பஞ்சாங்க வசனம் என்று வறுத்தெடுக்கிறார்கள்.
கற்பு, குடும்பம், தாலி, கல்லானாலும் புருஷன் போன்ற பிற்போக்குத்தனங்களை முன்வைத்து பெண்களை கடவுளாக்குவது. ஒழுக்கம் கெட்டவளாக சித்தரித்து அதே பெண்களை கீழானவர்களாக்குவது என்ற இரண்டு கொடுமைகளை பெண்களுக்கு எதிராக செய்திருக்கிறது இப்படம்.
பழனி - மொட்டை.
|
|
ப்ளஸ்..
|
மைனஸ்..
|
------
|
இயக்குனரின் ஆக்கம்
இயக்கம் அனைத்தும்!
|
E-mail this page to your friend!
Feedback!
|
|
|
|
|
Online Support 9 AM to 6 PM IST
|
|
|
24 Hours Phone Support
|
| 91 - 44 - 56111702
|
Send this page to your friend!
|
|
|
|
|