www.cinesouth.com Cinesouth Library
   Cine Chance |  Gallery |  News |  eCards |  Wall Papers |  Reviews & Previews |  Screensavers  Interviews  Channels  
 



                                                                                                                                                                                                            - ஜான்

ரஷ்ய இயக்குனர் செர்ஜி ஐஸன்ஸ்டின் 1925-ம் ஆண்டு எடுத்த திரைப்படம் 'பேட்டில்ஷிப் பொட்டம்கின்.' மெளனப்படமும்கூட. இன்று உலகெங்கும் உள்ள திரைப்பட இயக்குனர்களின் வேதநூலாக இப்படம் உள்ளது.

1905-ல் ரஷ்யாவில் நடந்த புரட்சியை ஐஸன்ஸ்டின் 'பேட்டில்ஷிப் பொட்டம்கின்' படமாக எடுத்தார். போர்க்கப்பல் பொட்டம்கினில் பணிபுரியும் மாலுமிகளுக்கு புழுக்கள் நெளியும் இறைச்சியிலிருந்து சூப் தயாரித்து வழங்கப்படுகிறது. அதனை அருந்த மாலுமிகள் மறுக்கின்றனர்.

அவ்வாறு சூப்பை அருந்த மறுக்கும் மாலுமிகளை சுட்டுக் கொல்ல கப்பல் கேப்டன் உத்தரவிடுகிறான். படை வீரர்களின் துப்பாக்கிகள் உயர்கின்றன. அப்போது மாலுமிகளில் ஒருவனான வகுலின்சுக் 'சகோதரர்களே' என்கிறான். படைவீரர்கள் சுட மறுக்கின்றனர். கலகம் வெடிக்கிறது. மாலுமிகளும் படைவீரர்களும் அதிகாரிகளை தோற்கடித்து கப்பலை கைப்பற்றுகின்றனர். இந்த மோதலில் வகுலின்சுக் சுடப்பட்டு இறக்கிறார்.

ஒடெசா துறைமுகத்திற்கு கப்பல் வருகிறது. வகுலின்சுக்கின் உடல் கரையில் 'ஒரு கோப்பை சூப்புக்காக கொல்லப்பட்டவன்' என்ற குறிப்புடன் வைக்கப்படுகிறது. மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். ஆவேசம் கொள்கின்றனர். நகரமே துறைமுகத்தில் திரண்டு இன்னொரு கடலென கொந்தளிக்கிறது.

பொட்டம்கின் கப்பலில் உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை மக்கள் வழங்குகிறார்கள். பொட்டம்கின் வெற்றியை தங்கள் வெற்றியாக அகம் மகிழ்கிறார்கள்.

ஜார் மன்னனின் படைபிரிவு துறைமுகத்தில் திரண்டிருக்கும் ஜனத்திரளை நோக்கி சுடுகிறது. ஒடெசா படிக்கட்டுகளில் ஜனங்கள் உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள். ஜாரின் துப்பாக்கிகள் அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கிறது.

பொட்டம்கின் கப்பலை தாக்க கடற்படை கப்பல்கள் வருகின்றன. பதட்டம் நிறைந்த இரவு. அருகில் கப்பற்படை கப்பல்கள் சுடுவதற்கான ஆயத்தத்தின்போது காற்றை கிழித்து வருகிறது ஒரு குரல், 'சகோதரர்களே...'

கப்பற்படையின் பீரங்கிகள் தலைவணங்குகின்றன. பொட்டம்கினுடன் மற்ற கடற்படை வீரர்களும் இணைந்து கொள்கிறார்கள். புரட்சி வெல்கிறது.



உண்மையில் 1905-ல் நடந்த கலகம் தோல்வியில் முடிந்தது. புரட்சியின் இறுதி வெற்றி 1917-ல்தான் கிடைத்தது. ஆனால், பொட்டம்கின் கலகம் வெற்றியில் முடிந்ததாக காட்டியிருப்பது ஒரு கலைஞனின் எதிர்பார்ப்பு, நல்லவை தோற்கக்கூடாது என்ற நல்லெண்ணம்.

இந்தப் படத்தை ஐஸன்ஸ்டைன் இயக்குவதற்கு முன்புவரை படத்தொகுப்பு (Montage) என்பது இரண்டு வெவ்வேறு காட்சிகளை இணைப்பது என்ற அளவிலேயே இருந்தது. ஐஸன்ஸ்டின் இரண்டு காட்சிகளை இணைப்பதன் வழியாக மூன்றாவது காட்சியை இப்படத்தில் உருவாக்கிக் காட்டினார். இதனால் மான்டேஜின் தந்தை எனப்படுகிறார் ஐஸன்ஸ்டின்.

உலகின் சிறந்த 10 படங்கள் பட்டியலில் எப்போதும் இடம்பெறும் தகுதிவாய்ந்த இப்படத்தின் திரைக்கதையை நிழல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் பொட்டம்கின் பற்றி ஐஸன்ஸ்டின் கூறியது, ஒடெசா படிக்கட்டுகள் காட்சிக் கோர்வை - ஒருபடிநிலை ஆய்வு ஆகியனவும் இந்நூலில் உள்ளது. சினிமா என்ற கலைமீது ஆர்வம் கொண்ட அனைவரின் நூலக அலமாரியிலும் அவசியம் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்த புத்தகம்.

இந்தப் புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்,

விலை ரூபாய் 110/-. ஷிப்பிங் சார்ஜ் (Shipping charge) ரூபாய் 40/- (In India)

மேலும்...

(திரையுலகம் ஒரு சமுத்திரம்)

(நிழல்)

(ரஜினி - சப்தமா? சகாப்தமா?)

(இகுரு)

(உதிரிப்பூக்கள்)

(சார்லி சாப்ளின் கதை)

(உலகசினிமா)



   Games |  Tv Guide |  Discussion |  Mistaken Takes |  Star Birthdays |  Star Ratings |  Theatres Online |  Jilkos  Fanclub 
Copyright © 2004 Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us