Home |  Cine Chance |  Gallery |  News |  Reviews & Previews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
  -08.02.2006
   Home  | Interviews  | Gallery Click here for Ilavattam pics!


இளமை துள்ளும் 'இளவட்டம்' ஷூட்டிங் விசிட்


   Written by:  Palani swamy



Navdeep, Sheela கல்பனா ஹவுசில் 'இளவட்டம்' படத்திற்காக சண்டைக்காட்சி எடுப்பதை சினிசவுத் ஷூட்டிங் விசிட்டிற்காக கவர் பண்ண சென்ற நமக்கு 'கிளுகிளு' ஆச்சர்யம் காத்திருந்தது. ஆமாம், இளம் நாயகன் நவ்தீப்பும் அறிமுக நாயகி ஷீலாவும் படுநெருக்கமாக நடிக்க, கிளாமராக காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார் இயக்குனர் ஏ.ஆர். ராஜராஜா. "என்ன சார், இன்னைக்கு பைட் சீன்னு சொன்னீங்க! ஷெட்யூல் சேஞ்ச் பண்ணீட்டிங்களா?" என்று கேட்ட நம்மிடம் சிரித்தபடியே, "அவசரப்படாதீங்க தலைவா! பைட் சீனுக்குதான் இப்ப லீட் எடுத்திட்டிருக்கோம். அடுத்து பைட்தான். கனல்கண்ணன் சார் இப்ப வந்திடுவார். ஆன் த வே-ன்னு இப்பதான் போன் பண்ணார். அவர் வர்றதுக்குள்ள லீடை எடுத்து முடிச்சிடணும்" என்று சொல்லிவிட்டு பிஸியானார் ஏ.ஆர். ராஜராஜா.

தாவணி போடாமல் மஞ்சள் நிஜ ஜாக்கெட் பாவாடையில் கவர்ச்சியாக ஷீலா படுக்கையில் சாய்ந்திருக்க, நவ்தீப் அவரை அணைக்க, இருவரும் தங்களை மறந்து காதல் மயக்கத்தில் இருப்பதை இருவருக்கும் மேலாக உயரத்தில் ஸ்டெடி கேம் வைத்து டாப் ஆங்கிளில் கதகதப்பாக படமாக்கினார் 'ப்ரியமுடன்', 'அடிதடி' உட்பட பல வெற்றிப்படங்களை ஒளிப்பதிவு செய்த கேமராமேன் செல்வா. 'நந்தா' படத்தில் சூர்யாவுக்கு தங்கையாக, பயந்தபடி அப்பாவியாக நடித்த சின்னப்பெண்ணா இது என்று நாம் ஆச்சர்யப்படும் வகையில் ஏ.ஆர். ராஜராஜா செய்து காட்டியபடி துருதுருவென்று அந்த நெருக்கமான காதல் காட்சியில் நடித்தார் ஷீலா.

சண்டைக்காட்சிக்கான லீட் எடுத்து முடிக்கவும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் வரவும் சரியாக இருநத்து. மாஸ்டரிடம் ஏ.ஆர். ராஜராஜா சண்டைக்காட்சிக்கான கான்செப்ட் சொல்லியதை நாமும் கவனித்தோம். "சார், ஹீரோயின் வீட்ல எல்லோரும் கல்யாணத்துக்காக அவுட்ஸ்டேஷன் போயிடறாங்க. ஹீரோயின் மட்டும் தனியா இருக்கா. தான் தனியா இருக்கறதை ஹீரோவுக்கு தகவல் சொல்லி அனுப்ப, ஹீரோ வர்றான். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் ஸ்கூல்ல படிக்கிற இளவட்டங்கள். தனிமை அவுங்க உணர்ச்சிகளை பற்றவைக்குது. ரெண்டு பேரும் கொஞ்சம் கொஞ்சமா உணர்ச்சிக்கு அடிமையாக ஆரம்பிக்கிறாங்க.

இப்ப ஏற்கனவே ஹீரோயின் மேல் ஒரு கண் வச்சிருக்கிற அவ அக்கா புருஷன் ஹீரோயின் தனியா இருக்குற விஷயம் தெரிஞ்சு வர்றான். வந்தவனுக்கு இவுங்க இருந்த கோலத்தைப் பாத்து ஆத்திரம் வர, ஹீரோயினை அடிக்கப்போறான். ஹீரோ அவனைத் தடுக்க, அவன் ஹீரோவை அடித்து கயித்துல கட்டி தலைகீழாக தொங்கவிட்டுட்டு, ஹீரோயினை ரேப் பண்ண முயற்சிக்கிறான். ஹீரோ கயித்துல தொங்கியபடியே வேகமா ஆடி அங்க இருக்குற பெரிய கண்ணாடில மோதி உடைச்சு கண்ணாடில கயித்தை அறுத்திட்டு வந்து வில்லனை துவம்சம் பண்றான் சார்," என்று டீடெய்லாக காட்சியை விளக்கிச்சொன்னார் ஏ.ஆர். ராஜராஜா.

அக்கா புருஷனான பிருதிவிராஜுக்கும் (பப்ளு), நவ்தீப்புக்கும் நடக்கும் சண்டைக்காட்சியை விறுவிறுப்பாக இருக்கும்படி அமைத்தார் கனல்கண்ணன். இளம் நாயகன் நவ்தீப் சண்டைக்காட்சியில் முழு ஈடுபாட்டோடு உற்சாகமாக நடித்ததை கனல்கண்ணன் பாராட்டினார். தலைகீழாக கயிற்றில் தொங்கியபடி கிளாஸை உடைக்கும் ஷாட்டை எடுக்க, ஸ்டண்ட்மேனை நவ்தீப்புக்காக டூப் வைத்து படமாக்கப் போனபோது, நவ்தீப் தானே அந்த ஷாட்டில் நடிப்பதாகக் கூற கனல்கண்ணன் அதை ஏற்கவில்லை. 'வேண்டாம், இது ரிஸ்க்' என்று அவர் சொன்னதை இயக்குனர் ராஜராஜாவும் ஆமோதித்தார்.

ஆனால் நவ்தீப்போ, "முதுகுபக்கமா தானே உடைக்கிறேன். காயம் ஏற்படாம பாத்துக்கறேன்" என்று பிடிவாதம் பிடித்து, அந்த ஷாட்டில் நவ்தீப்பே நடித்து கச்சிதமாக கிளாஸை உடைத்தார். ஆனாலும் உடைந்த கண்ணாடித்துண்டுகள் முகத்தில் லேசான சிராய்ப்பையும் கைகளில் காயத்தையும் ஏற்படுத்தின. அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் அந்த சண்டைக்காட்சியில் நடித்ததை மொத்த யூனிட்டும் பாராட்டியது.

கல்பனா ஹவுஸிலிருந்து நாம் ஏ.ஆர். ராஜராஜாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டோம். அப்போது 'இளவட்டம்' படம் பற்றி அவர், "பாலுமகேந்திரா சார்தான் முதன் முதலா விடலைப்பசங்களோட காதல், இல்லையில்ல இன்பேக்சுவேஷனை தமிழ் சினிமாவுல சொன்னார். அந்த வரிசைல, அப்ப வந்த 'பன்னீர் புஷ்பங்கள்'ல இருந்து இப்ப வந்த 'துள்ளுவதோ இளமை' வரை இன்பேக்சுவேஷனை பேஸ் பண்ணி எடுத்த எல்லா படங்களுமே சக்சஸ் ஆகியிருக்கு. 'இளவட்டம்' படமும் நிச்சயம் அந்த வரிசைல சேரும்" என்று உறுதியுடன் சொன்னார்.

ஸ்ரீராஜராஜேஸ்வரி கம்பைன்ஸ் சார்பாக ஹரிகோபாலகிருஷ்ணா மற்றும் டி. பாஸ்கர் தயாரிக்கும் 'இளவட்டம்' படத்தின் படப்பிடிப்புகள் தென்காசி, செஞ்சி, சென்னை உட்பட பல இடங்களில் முடிந்த நிலையில், விரைவில் திரைக்கு வர உள்ளது.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   
 
Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hot Pictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us