Home |  Cine Chance |  Gallery |  News |  Reviews & Previews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
  -10.12.2005
   Home  | Interviews  | Gallery




  Written by:  JBR



இந்த கட்டுரையின் தலைப்பு 'மனோஜ் அர்ஜூன் அமிதாப் மற்றும் டென்சல் வாஷிங்டன்' என்று இருந்திருக்க வேண்டும். காரணத்தை பிறகு பார்ப்போம். முதலில் நம் சினிமாவின் 'காப்பி' குளறுபடிகள்.

தமிழில் தயாராகும் பத்து படங்களில் ஏழு பிறமொழி படங்களை தழுவி எடுக்கப்படுபவை. இந்த தழுவல் 'மஜா', 'ஆதி' போன்று அதிகாரபூர்வமாகவும் இருக்கலாம். அல்லது அத்துமீறல்களாகவும் இருக்கலாம் - 'அவ்வை சண்முகி', 'கஜினி' மாதிரி.

எப்படியிருந்தாலும் ஒரு படம் வேறு மொழிக்கு... கலாசாரத்துக்கு... ரசனைக்கு மாற்றப்படும்பொழுது கவனிக்கவேண்டிய பொதுவிதிகள் சில உண்டு. துரதிர்ஷ்டவசமாக எந்த தமிழ் இயக்குனரும் இந்த விதிகளை கணக்கில் கொள்வதில்லை. இதனால் ஏற்படும் அனைத்து அங்ககீனங்களுடன் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படம், 'ஆணை.' 2004-ம் வருடம் ஹாலிவுட்டில் வெளியான டோனி ஸ்காட் (Tony Scott) இயக்கிய 'மேன் ஆன் பயர்' படத்தின் தழுவல், 'ஆணை'. அதில் டென்சில் வாஷிங்டன் வாழ்ந்திருந்த கேரக்டரில் வந்து போகிறார் அர்ஜூன்.

'மேன் ஆன் பயர்' படத்தின் துவக்கம், போதைக்கு அடிமையான டென்சில் வாஷிங்டன்னிலிருந்து துவங்குகிறது. வாழ்வின் பசுமையான தருணங்கள் எதுவும் வாய்க்காத பட்டமரம் டென்சில் வாஷிங்டன். இவரது தனிமையை... போதையை மறக்க, அவரது நண்பர் வேலை ஒன்றை சிபாரிசு செய்கிறார். மெக்சிகோவின் பணக்கார குடும்பத்தின் குழந்தைக்கு பாதுகாவலனாக பணிபுரியவேண்டும். டென்சிலும் ஒப்புக்கொள்கிறார். அந்த சிறுமியின் அருகாமை டென்சிலின் தனிமையை மெல்ல மெல்ல களைகிறது. 'நான் எதிலும் வெற்றி பெற்றதே இல்லை' என்று கூறும் சிறுமிக்கு போராடவும் வெற்றி கொள்ளவும் கற்று தருகிறார் டென்சில். இடைஇடையே அவரது கடந்த காலமும் பார்வையாளருக்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

போதைக்கு அடிமையாகும் முன் C1A-யின் 'ட்ரெயின்டு கில்லர்'ராக இருந்தவர் டென்சில் வாஷிங்டன். தேசத்துக்கு எதிரானவர்கள் என்று C1A கருதும் நபர்களை எவ்வித குற்றவுணர்ச்சியும் இன்றி கொலை செய்வது டென்சிலின் பணி. இறுக்கமும், வன்முறையும் நிறைந்த பயற்சி டென்சிலை மாற்றுகிறது. தவிர, தனது வேலையின் பொருட்டு தனது பெண் தோழியையும் இழக்கிறார். வாழ்வின் கடைசி நம்பிக்கையும் இழந்தவராக போதையில் ஆழ்ந்துகிடந்த டென்சிலின், கறுப்பான இந்த இறந்த காலம், மெக்சிகோ பணக்கார குடும்பத்துக்கோ, அவர்கள் குழந்தையை கடத்த திட்டமிட்டிருக்கும் கடத்தல்காரர்களுக்கோ தெரியாது.

இந்நிலையில் டென்சிலின் பாதுகாப்பையும் மீறி சிறுமி கடத்தப்படுகிறாள். டென்சிலும் சுடப்படுகிறார். காயத்திலிருந்து மீண்டுவரும் டென்சில் ஒரு ப்ரபஷனல் கில்லருக்குரிய நேர்த்தியுடன் கடத்தல்காரர்கள் ஒவ்வொருவராக கொலை செய்து இறுதியில் குழந்தையை காப்பாற்றி தானும் இறந்துபோவது, சீட் நுனியில் அமரவைக்கும் காட்சிகள்.

'டாப்கன்', 'எனிமி ஆப் தி கேட்', 'ஸ்பை கேம்' உள்பட பல புகழ்பெற்ற ஆக்ஷ்ன் படங்களை இயக்கிய டோனி ஸ்காட்டின் படத்தைதான் செல்வா 'ஆணை'யாக்கியிருக்கிறார்.

'மேன் ஆன் பயரி'ன் முக்கிய அம்சங்களில் ஒன்று, கதைக்களம். வன்முறையும், அபினும், ஆயுதங்களும் நடைமுறை வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட மெக்சிகோவும் அதன் கடத்தல்காரர்களும் தமிழ்நாட்டுக்கு மிகமிக அந்நியமானவை. 'ஆணை'யின் மிகப்பெரிய பலவீனம் இது. தோள்வரை முடிவளர்த்த சிலர், "தீவிரவாதத்துக்கு பணம் புரட்ட குழந்தைகளை கடத்தி பணம் பறிப்போம்" என கூட்டம் போட்டு அறிவிப்பதாக ஒரு காட்சி அமைத்து இதை ஈடு செய்யமுன்றிருக்கிறார் செல்வா. பரிதாபமே எஞ்சுகிறது.

இரண்டாவது, கதாபாத்திரம். கொலை செய்வதற்கென்றே ஆள்களை தயார் செய்வதும் அவர்களை யந்திரங்களை போல பயிற்சியின் வழியாக மாற்றுவதும் அமெரிக்கா C1A-யில் சகஜம். இங்கு? அர்ஜூன் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட். டப் டப் என்று அவர் சிலரை போட்டுதள்ளுவதும் காயம் காரணமாக அவரை டிஸ்மிஸ் செய்வதும் அந்த கோபத்தில் தாடிவளர்த்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும்... டென்சிலின் மனஇறுக்கத்தில் ஒரு பகுதியை கூட அர்ஜூன் கதாபாத்திரத்தில் இயக்குனரால் கொண்டுவர முடியவில்லை. இது அவரது தவறும் இல்லை. கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்தியவர் மீது பயமா வரும்? அதிலும் பரிதாபமே!

இந்த இரண்டாவது குளறுபடியின் தொடர்ச்சிதான் மூன்றாவது. செடிக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு, அவ்வளவு பெரிய சமூகத்தில் சாதாரணமாக உலவும் ஒருவன், சிறுமியிடம் மட்டும் முசுடாக நடந்துக்கொண்டால்...? மூன்றாவது விலகல் இது.

இந்த மூன்றும் வலுவில்லாத காரணத்தால், சிறுமி கடத்தப்பட்டு அதற்கு அர்ஜூன் பழிவாங்க கிளம்பும்போது தேமே என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

தமிழர் வாழ்வியலுக்கு பொருந்தாத கதை, கதாபாத்திரம் மற்றும் கதைக்களங்களால் குதறப்பட்டிருக்கிறது 'ஆணை' - டைட்டானிக் படத்தை கட்டுமரத்தில் எடுத்த மாதிரி!

இதே கதையை 'சாதுர்யன்' பட இயக்குனர் படமாக்க முயன்றார். ஹீரோ மனோஜ். படப்பிடிப்புக்கு முன்பே ட்ரெயிலரும் தயாரானது. பிறகு 'ஆணை' கதையும் இதேதான் என்று தெரியவந்ததும் படவேலை கைவிடப்பட்டது.

இறுக்கமும் வன்முறையும் கொண்ட என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்டாக மனோஜ்... இயக்குநரின் துணிச்சலை என்னவென்பது!

'மேன் ஆன் பயர்' அத்தனை எளிதில் அணைந்துவிடாது போல. 'ஆணை'யை தொடர்ந்து 'ஏக் அஜ்னபி' என்ற பெயரில் இந்தியிலும் காப்பியடிக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். இம்மாதம் ஒன்பதாம் தேதி ரிலீஸாகியிருக்கும் இந்தப்படத்தில் டென்சிலின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் அமிதாப்பச்சன்! தெலுங்கு, மலையாளத்திலும் பயர் மறுஉருவம் எடுக்கலாம்.

நம் படைப்பாளிகளின் படைப்புத்திறன் அப்படி!



Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   
 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hot Pictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us