Home |  Cine Chance |  Gallery |  News |  Reviews & Previews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
  -19.12.2005
   Home  | Interviews  | Gallery




  Written by:  JBR



திரைப்படங்களை உணர்வுரீதியாக எதிர்கொள்ளும் தமிழ் சமூகத்தில், படைப்பின் தரத்தை உரசிப்பார்க்கவும், பலவீனங்களைப் புரிந்து கொள்ளவும், சினிமா மொழியை செம்மைப்படுத்தவும், ரசனையை வளர்த்துக் கொள்ளவும் இயக்குனர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு சர்வதேச திரைப்படங்கள்.

உலக திரைப்படங்களுடன் ஒப்பிட்டு தமது திரைமொழியை செம்மைப்படுத்தும் போக்கு தமிழின் இளம் இயக்குனர்களிடையே அதிகரித்துள்ளது. யதார்த்தத்தை மிக அருகில் தரிசித்த பாலாஜி சக்திவேலின் 'காதல்'போன்ற படங்கள் இந்த பாதிப்பின் நல்ல வெளிப்பாடுகள் எனலாம்.

தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்திவரும் 'இந்தோ சினி அப்ரிவேஷன்'17-12-2005 முதல் சென்னையில் தனது மூன்றாவது சர்வதேச திரைப்பட விழாவை துவக்கியது.

அன்று மாலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை செயலர் எஸ்.கே.அரோ விழாவை துவங்கிவைத்தார். தமிழ் திரையுலகிலிருந்து பிரசாந்த்,சினேகா கலந்து கொண்டனர்.

துவக்க நாளன்று திரையிடப்பட்டது 'ROSENSTRASSE'என்ற ஜெர்மனிய படம். பெண் இயக்குனர் MARGRATHE VON TROTTA இயக்கிய இந்தப் படம் நாசிக்களால் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பின்புலமாக கொண்டது.

இதே பின்புலத்தில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இன்றும் வருடத்திற்கு மூன்று படங்களாவது இதே கதைகளத்துடன் வெளியாகின்றன. யூதர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட காலகட்டம் பின் தங்கி, பாலஸ்தீனத்தில் யூதர்கள் முஸ்லீம்களை நாசப்படுத்தும் வன்முறை அரங்கேறி வருகிறது. சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் தனது நாச வேலைகளை உற்சாகமாக பாலஸ்தீனர்களின் மீது ஏவிவருகிறது இஸ்ரேல்.

இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் யூதர்களின்பால் கழிவிரக்கம் தோன்றும் ஒரு படமா? திரைப்பட விழாவில் நாம் கேட்ட முணுமுணுப்பு இது. அதே நேரம் நாசிக்களின் கொடுமையும் யூதர்களின் பரிதவிப்பும் ஒரு பெண் இயக்குனரின் பார்வையில் காண முடிந்த மகிழ்ச்சியை பார்வையாளர்கள் முகங்களில் பார்க்க முடிந்தது.

படம் துவங்கும் முன் இயக்குனர் படத்தைக் குறித்து பேசியது நிகழ்ச்சியின் சிறப்பு!

திரைப்பட விழாவின் இரண்டாம் நாள் (18-12-2005)திரையிடப்பட்ட மொத்த திரைப்படங்கள் 15. ஆனந்த் திரையரங்கில் ஐந்து. லிட்டில் ஆனந்தில் ஆறு. பிலிம் சேம்பர் திரையரங்கில் நான்கு.

லிட்டில் ஆனந்தில் காலை பத்துமணிக்கு திரையிடப்படுவதாக இருந்த KARKASH(ஹிந்தி-இயக்குனர் கமல் சந்தானா) படத்திற்கு பதில் ஸ்வீடன் படமான 'THE GUY IN THE GRAVE NEXT DOOR'திரையிடப்பட்டது KJELL SUNDVALL இயக்கிய இந்தப் படத்திற்கு பார்வையாளர்களின் வரவேற்பு அமோகம். நேற்று திரையிடப்பட்ட மற்ற திரைப்படங்கள்.

MOTHER KISS-இயக்குனர் ZOLBAYAR DORJ- மங்கோலியா

PACKING MONKEYS AGAIN- இயக்குனர் MARIJA DEROVIC- செர்பியா

STAR- இயக்குனர் NIKOLAI LEBEDEV- ரஷ்யா

LOVE STAR- இயக்குனர் MILAN SPASIC- செர்பியா

DIASCONTADOS (Running out of time)-இயக்குனர் IMANOL VRIBE- ஸ்பெயின்.

LA DENTELLIERE (The Lace Market)-இயக்குனர் CLAVDE GORETTA- பிரான்ஸ்

WEED- இயக்குனர் FATIH AKIN- ஜெர்மனி(ஜெர்மனிவாழ் துருக்கியர் இவர்)

I THINK ABOUT GERMONEY: WE FORGOT TO GO BACK- இயக்குனர் FATIH AKIN

THE HOUSE HOLDER- இயக்குனர் JAMES IVORY-UK.

GOOSE FEATHER- இயக்குனர் LJUBISA SAMARDZIC- செர்பியா

LIFE AND TIMES OF HANK GREENBERG- இயக்குனர் AVIVA KEMPNER- USA

LA PIANISTE- இயக்குனர் MICHAEL HANEKE- பிரான்ஸ்

JAPANESE STORY-இயக்குனர் SUEBROOKS- ஆஸ்திரேலியா

HEAD ON- இயக்குனர் FATIH AKIN- ஜெர்மனி

திரைப்பட விழாவில் ஜெர்மனிவாழ் துருக்கியர் இயக்கிய திரைப்படங்கள் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்ததை கவனிக்க முடிந்தது.

தமிழ் இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், ஏ.வெங்கடேஷ் காத்திருந்து பார்த்த படம் ரஷ்யாவின் STAR. போர் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படம் ரஷ்ய நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இந்நாவல் பல வருடங்களுக்கு முன் 'விடிவெள்ளி' என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விழா அரங்கில் பாலாஜி சக்திவேல், ஏ.வெங்கடேஷ் தவிர பாலுமகேந்திரா,ரேவதி, ரமேஷ்கண்ணா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட தமிழ் திரைப்பட பிரபலங்களையும் காண முடிந்தது.

இம்மாதம் 25ம் தேதிவரை நடைபெற இருக்கும் இவ்விழாவில் மொத்தம் 102 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மழையையும் மீறி அரங்கம் நிரம்பி வழிந்தது தமிழில் நல்ல சினிமா தோன்றுவதற்கான நம்பிக்கையை வலுப்படுத்துவதாக இருந்தது.


   


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   
 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hot Pictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us