Home |  Cine Chance |  Gallery |  News |  Reviews & Previews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
  -21.12.2005
   Home  | Interviews  | Gallery




  Written by:  JBR



19-12-05 அன்று ஆனந்த் திரையரங்கைவிட்டு வெளியேறிய பார்வையாளர்களின் முகங்களை ஒருவர் பார்த்திருந்தால், நல்ல சினிமா உருவாக்கும் பூரிப்பின் பிரகாசத்தை அவர் அடையாளம் கண்டு கொண்டிருப்பார்.

ஆயிரம் பேர் சேர்ந்து காணும் கனவான சினிமா, சில சந்தர்ப்பங்களில் மட்டுமே தனது முழுமையை அடைந்திருக்கிறது. இயக்குநர் BENITO ZAMBRANO இயக்கிய ஸ்பானிய படமான SOLAS அப்படியொரு படம்.

அம்மா மகள் மற்றும் வயதான பக்கத்து வீட்டு மனிதர். இந்த மூவருக்குள் உருவாகும் மெல்லிய உறவை மிகையில்லாமல் காட்சிப்படுத்துகிறது SOLAS. கர்ப்பிணியாக்கப்பட்டு காதலனால் கைவிடப்படும் மகள்.... ஆஸ்பத்திரி படுக்கையிலும் சந்தேகம் கொள்ளும் கணவனுடன் வாழும் தாய்.... ஒரு நாயை மட்டும் சொந்தமாகக் கொண்டு தானே சமைத்து உயிர்வாழும் வயதான மனிதர்.... வாழ்வின் கசப்பை மட்டுமே பருகிய ஆன்மாக்கள் இயல்பாக தங்களுக்குள் ஆறுதல் தேடிக்கொள்வது பார்வையாளர்களிடம் பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது. மிகையில்லாத நடிப்பும், கோர்வையான திரைக்கதையும் இதற்கு முக்கிய காரணங்கள்.

2000-ம் ஆண்டு ANGERS EEROPEAN FILM FESTIVAL-ல் ஆடியன்ஸ் அவார்ட் மற்றும் பெர்லின் சர்வதேச திரைப்பட விருது உள்பட பல விருதுகளை SOLAS திரைப்படம் வென்றிருக்கிறது.

பார்வையாளர்களை கவர்ந்த மற்றுமொரு திரைப்படம் இத்தாலி இயக்குனர் SALVATORE MEREU இயக்கிய THREE STEP DANCING.

ஜெர்மனி பெண் இயக்குனர் AYSE POLAT-ன் 'TOUR ABROAD' ANKARA INTERNATIONAL FILM FESTIVAL-ல் MOST PROMISING DIRECTOR விருதை AYSE POLAT -க்கு பெற்று தந்தபடம். 1998-ல் வெளியான இந்தப் படம் இன்றும் ஈர்ப்படும் இருப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று.

1965-ம் ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் SILVER BERLIN BEAR விருதும் நடிகை மதும் ஜெஃப்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றுத்தந்த, இயக்குனர் JAMES IVORY-ன் SHAKESPEARE WALLAH திரைப்படமும் திரையிடப்பட்டது. JAMES IVORY இங்கிலாந்தை சேர்ந்தவர்.

இவை தவிர, ஆஸ்திரேலிய இயக்குனர் KRIV STENDERS-ன் 'THE ILLUSTRATED FAMILY DOCTOR' செக் குடியரசின் 'THE JESTER AND THE QUEEN' (இயக்குனர் VERA CHYTILOVA), இயக்குனர் PIERRE YAMEOGO -வின் 'MOI ET MONT BLANC' (COUNTRY - BURKIN FASO), மங்கோலியாவின் OSOR BAT - ULZII இயக்கிய 'WORDS FROM THE HEART', செர்பியாவின் MILOS MISA RADIVOJEVIC இயக்கிய 'A WAKENING FROM THE DEAD' திரைப்படங்களும் திரையிடப்பட்டன.

விழாவின் இரண்டாம் நாள் ரஷ்யாவின் STAR படத்தை ரசித்தவர்களுக்கு மூன்றாவது தினம் பார்க்க கிடைத்த ரஷ்ய திரைப்படம் ALEKSANDR PTUSKO-வின் 'RVSLAN AND LUDMILA'.

19-12-05 அன்று திரையிடப்பட்ட மற்ற திரைப்படங்கள்:

SEDUCING MARYA - இயக்குனர் HUNT HOE - நாடு கனடா

CANDLE IN THE WIND - இயக்குனர் POURAN DERAKSANDEH - நாடு ஈரான்

AT FIRST SIGHT - இயக்குனர் DIANE KURYS - நாடு பிரான்ஸ்







Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   
 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hot Pictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us